ETV Bharat / sitara

’தமிழ்நாடு முதலமைச்சர், டிஜிபிக்கு நன்றி’ - ரவீந்தர் சந்திரசேகர் - chennai latest news

விஐபி-களின் பாதுகாப்புப் பணியிலிருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு அளித்து உத்தரவிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், டிஜிபி திரிபாதி ஆகியோருக்கு லிப்ரா புரொடக்ஷன்ஸ் உரிமையாளர் ரவீந்தர் சந்திரசேகர் நன்றி தெரிவித்துள்ளார்.

நன்றி
நன்றி
author img

By

Published : Jun 16, 2021, 7:29 AM IST

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய விஐபி-களின் பாதுகாப்புப் பணிகளில் பெண் காவலர்கள் ஈடுபட்டுவந்தனர். அத்தகைய சமயங்களில் இயற்கை உபாதைகளைக் கழிக்க முடியாமல் பெண் காவலர்கள் பலரும் இன்னல்களுக்கு உள்ளாகிவந்தனர்.

அதன் காரணமாக தற்போது விஐபி-களின் பாதுகாப்புப் பணியிலிருந்து விலக்கு அளித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், காவல் துறைத் தலைவர் திரிபாதி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவுக்கு நன்றி தெரிவித்து லிப்ரா புரொடக்ஷன்ஸ் உரிமையாளர் ரவீந்தர் சந்திரசேகர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “2019ஆம் ஆண்டு ‘மிக மிக அவசரம்’ என்றொரு திரைப்படத்தைக் காண நேரிட்டது. தனியறை இருளில் படம் பல கேள்விகளையும் சங்கடங்களையும் மனத்திற்குள் ஏற்படுத்திக் கொண்டே ஓடியது.

பெண் காவலர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான, மன ரீதியான சிக்கல்களை முகத்தில் அறைந்தாற்போல் பேசியிருந்தது படம். குறிப்பாக விஜபி-களின் காவல் பணியில் கால்கடுக்க நிற்கும் பெண் காவலர்களின் அவசரத் தேவைகளை உணர்த்தும் காட்சிகள் பெரும் சலனத்தை ஏற்படுத்தியிருந்தது.

சிறு முதலீட்டில் பெரும் வலியை சொன்ன அந்தப் படத்தை வெளியிடுவதற்கான முயற்சிகள் பல நாள்களாக நடந்துவருவதை அறிந்தோம். உடனே அப்படத்தை வாங்கி விநியோகிக்க வேண்டும் என்று தீர்க்கமாக உறுதிபூண்டோம்.

அதன்படியே அடுத்த சில மாதங்களில், அத்திரைப்படத்தை தமிழ்நாடு திரையரங்குகளில் எங்களின் லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பாக விநியோகித்து வெளியிட்டோம்.

அதனைத் தொடர்ந்து தற்போது முதலமைச்சர் உள்ளிட்ட விஜபி-களின் பாதுகாப்புப் பணிகளிலிருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், காவல் துறைத் தலைவர் திரிபாதி ஆகியோரின் உத்தரவைத் தொடர்ந்து தற்போது நடைமுறைக்கும் வந்திருப்பது, மனத்தில் குடிகொண்டிருந்த அத்தனை ஆற்றாமைகளையும் ஒருசேர அடித்துச் சென்றுவிட்டது.

இந்நேரத்தில் இப்படியொரு கதையை எழுதிய ஜெகன்நாத்தையும், திரைக்கதை எழுதி இயக்கிய இயக்குநர் சுரேஷ் காமாட்சியையும் மனதார வாழ்த்துகிறேன். இப்படத்தை விநியோகித்ததற்கு லிப்ரா புரொடக்ஷன் என்றென்றைக்கும் பெருமைகொள்ளும்.

மிக மிக அவசரம் படக்குழு, அனைத்து பெண் காவலர்கள், லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பாக முதலமைச்சர், காவல் துறைத் தலைவர் ஆகியோருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சமூக அக்கறை மிகுந்த படைப்புகள் மீதும், செந்தமிழின் மீதும் தனி அக்கறை கொண்டிருந்தவர் கருணாநிதி. அவரது அடிச்சுவட்டில் பயணிக்கும் மு.க. ஸ்டாலினிடம் சில கோரிக்கைளையும் வைக்க விரும்புகிறேன்.

1. தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு வரிவிலக்கு, சென்னையில் படப்பிடிப்புகளுக்கு குறைந்த கட்டணம் என கருணாநிதி கொண்டுவந்த முத்தான திட்டங்களை மீண்டும் தொடர வேண்டுகிறேன்.

2. கரோனா காலத்தில் திரையரங்குகள் இயங்காததால், அவற்றின் மின்சாரத் தொகை, சொத்துவரியை தள்ளுபடி செய்தோ அல்லது அவற்றில் சலுகை அளித்தோ திரையரங்க உரிமையாளர்களின் சுமையைக் குறைக்க வேண்டுகிறேன்.

3. அடுத்தடுத்த கட்ட தளர்வுகளின்போது திரையரங்குகளைத் திறந்து, லட்சக்கணக்கான திரைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்டுத் தர வேண்டுகிறேன்.

4. கரோனா பாதிப்புகள் மேலும் சரிவடையத் தொடங்கியதும், கட்டுப்பாடுகளுடன்கூடிய படப்பிடிப்புகளை அனுமதித்து, திரையுலகத் தொழிலாளர்களைக் காப்பாற்றிட வேண்டுகிறேன்.

5. பெரும் படங்கள், ஓடிடி தளங்கள் எனப் பல போட்டிகளுக்கு மத்தியில் திரைக்கு வர சிரமப்படும் மிக மிக அவசரம் போன்ற சமூக அக்கறை மிக்க திரைப்படங்களை வெளியிட, மாநிலமெங்கும் மினி திரையரங்குகளை அமைத்து, சிறு படங்களையும், படைப்பாளிகளையும், தயாரிப்பாளர்களையும் ஊக்கப்படுத்தவும், அதன்மூலம் நல்ல திரைப்படங்கள் தொடர்ந்து உருவாகவும் உதவிட வேண்டுகிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ’இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே’- புதிய அவதாரத்தில் தமன்னா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.