ETV Bharat / sitara

காக்கிச் சட்டையில் மீசையை முறுக்கும் ரவிதேஜா.! - க்ராக் டீஸர்

ரவி தேஜா நடிப்பில் உருவாகி வரும் 'க்ராக்' படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.

Krack teaser
Krack teaser
author img

By

Published : Feb 21, 2020, 10:37 PM IST

நடிகர் ரவி தேஜா, இயக்குநர் கோபி சந்த் மலினேனி கூட்டணியில் வெளியாகி ஹிட் அடித்த இரு படங்கள் 'டான் சீனு' மற்றும் 'பலுபு'.

இந்த இரு படங்களைத் தொடர்ந்து இருவரும் மீண்டும் இணையும் புதிய திரைப்படத்துக்கு 'க்ராக்' என பெயரிடப்பட்டுள்ளது.

ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி தெலுங்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்பை ஏற்படுத்திருந்தது. இப்படத்தில் கரடு முரடான போலீஸ் அதிகாரியாக ரவி தேஜா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்.

வரலட்சுமி சரத்குமார், சமுத்திரக்கனி ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

சண்டைக் காட்சிகளை ராம் லக்ஷ்மனும், வசனங்களை சாய் மாதவ் புராவும் கவனித்துக்கொள்கின்றனர். தற்போது இப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

ரவுடிகளின் அட்டகாசங்களை ரவிதேஜா தனது அதிரடியால் அடித்து ஒதுக்குவது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இப்படம் மே 8ஆம் தேதி வெளியாகிறது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டு சமீபத்தில் ரவிதேஜா நடிப்பில் வெளியான 'டிஸ்கோ ராஜா' ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க: கவர்ச்சிக்கு புது அர்த்தம் சொல்லும் பாலிவுட் பிரபலங்கள் - டாபூ ரத்னானி காலண்டர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.