இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பாலிவுட்டில் தனக்கு வரும் வாய்ப்பை தட்டிப் பறிக்கப் பலரும் சதி செய்துவருவதாகச் சமீபத்தில் தனியார் வானொலி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார். இச்செய்தி தற்போது பூகம்பமாக வெடித்துள்ளது.
இதனையடுத்து திரையுலகத்தைச் சேர்ந்த ஏராளமானவர்கள் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாகப் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்கர் விருதுபெற்ற ரசூல் பூக்குட்டியும், பாலிவுட்டில் தன்னை ஒதுக்கி விட்டதாகப் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நான் ஆஸ்கர் விருது பெற்ற பிறகு எந்த ஒரு இந்திப் படங்களிலும் பணியாற்ற வாய்ப்பு தரவில்லை. ஒருசில தயாரிப்பு நிறுவனங்கள் என் முகத்திற்கு நேராகவே நீங்கள் எங்களுக்குத் தேவையில்லை என்று கூறினார்கள்" என மிகவும் உருக்கத்துடன் பதிவு செய்துள்ளார்.
இவர் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் சிறந்த ஒலிக்கலவைக்காக ஆஸ்கர் விருது வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.