சென்னை: நடிகை ராஷ்மிகா ரசிகர்களுக்கு அன்புக்கட்டளை விடுத்து வெளியிட்டுள்ளப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
பிரபல நடிகர்கள், நடிகைகளின் ரசிகர்கள் அவர்கள் விரும்பும் நட்சத்திரங்களை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று பல விதமான யுக்திகளைக் கையாண்டு, ரிஸ்க் எடுத்து நேரில் வந்து பார்க்கின்றனர்.
அந்தவகையில் நடிகை ராஷ்மிகாவைக் காண வேண்டும் என்பதற்காக தெலங்கானாவைச் சேர்ந்த நபர் ஒருவர் 900 கி.மீ., பயணித்துச் சென்றுள்ளார்.
ஆனால், அவர் கரோனா ஊரடங்கு காரணமாக, மீண்டும் தெலங்கானாவிற்கே காவல் துறையினரால் அனுப்பப்பட்டார்.
அதேபோல் ராஷ்மிகா அவரது சொந்த ஊரான கர்நாடகாவில் இல்லாமல், படப்பிடிப்புக்காக மும்பை சென்றுள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து நடிகை ராஷ்மிகா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "என்னைக் காண என் ரசிகர் ஒருவர் தொலை தூரத்திலிருந்து வந்ததாகக் கேள்விப்பட்டேன்.
தயவுசெய்து இதுபோன்று யாரும் செய்ய வேண்டாம். உங்களைச் சந்தித்த முடியாமல் போனது மிகவும் வருத்தமாக இருக்கிறது. நான் ஒரு நாள் உங்களைக் கண்டிப்பாகச் சந்திக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'தேன்' படத்திற்குக் கிடைத்த வரவேற்பு - மகிழ்ச்சியில் படக்குழு