ETV Bharat / sitara

இந்திய மொழிகளில் வெளியாகும் விஷாலின் லத்தி!

விஷால், சுனைனா நடிப்பில் உருவாகிவரும் படத்திற்கு 'லத்தி' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

author img

By

Published : Oct 18, 2021, 1:36 PM IST

Vishal
Vishal

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'எனிமி' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது. இதற்கான இறுதிகட்ட வேலைகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து விஷால் வினோத் குமார் இயக்கும் படத்திலும், 'வீரமே வாகைசூடும்' படத்தில் நடித்துவருகிறார்.

இந்நிலையில், வினோத் குமார் இயக்கிவந்த 'விஷால் 32' படத்திற்கு தற்போது 'லத்தி' எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஷாலுடன் சுனைனா, பிரபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

'லத்தி' படத்தை ராணா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணா, நந்தா இணைந்து தயாரிக்கின்றனர். இப்படம் இந்த நிறுவனத்தின் முதல் படமாகும். முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவுசெய்த படக்குழு தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தயாரித்துவருகின்றனர்.

சாம் சி.எஸ். இசையமைக்கும் 'லத்தி' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியிட படக்குழு முடிவுசெய்துள்ளது.

இதையும் படிங்க: மூன்றாவது முறையாக பிரபல நடிகருடன் இணையும் விஷால்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.