ETV Bharat / state

"மதுவிலக்கு அமல்படுத்த மட்டும் தேசியம் வேண்டுமா?" - கிருஷ்ணசாமி கேள்வி! - krishnaswamy

மதுவிலக்குக்கு தேசியத்தை தேடும் திமுக கல்விக்கு தேடக்கூடாதா? ஏன் தேசிய அளவில் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள்? என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 6, 2024, 7:55 AM IST

சேலம்: புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அரசு உயர் பதவிகளில் ஒரு பணி கூட இந்த அரசு அருந்ததியர் மக்களுக்கு வழங்காமல் அநீதியை செய்து வருகிறது. எனவே, அரசுப் பணிகளில் அருந்ததியருக்கு முன்னுரிமை என்ற அடிப்படை கோரிக்கையை வைத்து பேரணி நடத்த உள்ளோம்.

இட ஒதுக்கீட்டில் முன்னோடி என சொல்லிக்கொள்ளும் திமுக தன்னை, 'திராவிட மாடல் அரசு' என சொல்லி கொள்வதில் உண்மை இல்லை. இதற்கு முன் ஆட்சியில் இருந்தபோது கூட, இட ஒதுக்கீடு விவகாரத்தில் உண்மை, நேர்மை, வெளிப்படையாக திமுக நடந்து கொள்ளவில்லை. 3 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில், எப்பொழுதெல்லாம் ஒரு பணியிடம், இரண்டு பணியிடம் காலியாகுமோ அது அனைத்தையும் ஆதிதிராவிடர்களுக்கே வழங்கி, அருந்ததியர் மக்களை நிர்க்கதியாக்குகிறார்கள்.

கிருஷ்ணசாமி செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

அரசின் அனைத்து துறைகளிலும் உயர் பதவியில், உரிய இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. உள் ஒதுக்கீட்டில் குறிப்பிட்ட ஒரு பிரிவுக்கு மட்டும் அரசு முன்னுரிமை அளித்துள்ளது. சந்தர்ப்பத்துக்கு ஏற்ப திமுகவினர் பேசுவர். தேசிய கல்விக் கொள்கையை நிறைவேற்றுவதில் மாநில அரசு தயக்கம் காட்டுவது ஏன்? என தெரியவில்லை. மதுவிலக்குக்கு தேசியத்தை தேடும் திமுக கல்விக்கு தேடக்கூடாதா? மாநில அரசுக்கு நிதி வேண்டுமானால் மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட வேண்டும்.

இதையும் படிங்க: பாஜகவின் பொய்களை உடைத்தெறிய ஏராளமான திருச்சி சிவாக்கள் தேவை: புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

மதுவிலக்கு: மது என்பது மாநில பட்டியலில் இருக்கக்கூடியது. இந்தியாவில் மாநில பட்டியல், மத்திய பட்டியல் என தனித்தனியாக உள்ளது. ஆனால், மதுவைப் பொறுத்தவரை முழுக்க முழுக்க மாநில பட்டியலில் உள்ளது. பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று கேட்டால், தேசிய அளவில் அமல்படுத்த வேண்டும் என்று கேட்கிறார்கள். தேசியம் பிடிக்காத நீங்கள் ஏன் தேசிய அளவில் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று கூறுகிறீர்கள்?

அவர்களிடத்தில் வாய் பலம் இருப்பதால் எதையும் பேசி தமிழ்நாட்டு மக்களை தொடர்ந்து ஏமாற்றலாம் என்று நினைக்கிறார்கள். அவர்களுடைய பலமே 60 வருடமாக வாய் சவடாலை வைத்துத்தான் அரசியல் செய்து வருகிறார்கள். எல்லா காலகட்டத்திலும் இது எடுபடாது.

தமிழகத்தில் இன்றைக்கு இருக்கக்கூடிய கனிமவள கொள்ளை, ஊழல், சட்ட ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றிற்கு தமிழகத்தில் 2026-ல் குறைந்தபட்ச அம்ச திட்டத்தோடு அதிகார பலத்துடன் கூடிய ஒரு கூட்டணி ஆட்சி அமைந்தால் தான் விடிவுகாலம் பிறக்கும். இல்லையென்றால், லட்சக்கணக்கான மக்கள் வறுமையிலேயே 500க்கும், 1000திற்கு வாக்களித்து விடுவார்கள்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.