ஒரு சிறிய திரைத் தொடர் வரலாற்றின் தலைசிறந்த படைப்புகளுள் ஒன்றாக அங்கீகரிக்கப்படும் சில அபூர்வ நிகழ்வுகள் எப்போதாவதுதான் நிகழும்.
பல ஆண்டுகளுக்குப் பிறகும் அது பார்வையாளர்களின் விருப்பப்பட்டியலில் முக்கிய இடத்தை பெற்றிருக்கும். இயக்குநர் நாகாவின் 'ரமணி Vs ரமணி' தொடரானது இதற்கு மிகச்சிறந்ததொரு எடுத்துக்காட்டாக இருந்து வருகிறது.
சின்னத்திரையில் மிகச்சிறந்த பொழுதுபோக்கு அனுபவத்தைத் தந்ததோடு அல்லாமல், இப்போதும் ஆன்லைன் தளங்களிலும் ஒரு அற்புதமான அனுபவத்தைத் தொடர்ந்து தந்து வருகிறது.
'குடும்ப டிராமா' என்ற அடிப்படைக்கருவில் மிகச்சிறப்பான நகைச்சுவை தூவப்பட்டு, அட்டகாசமான வகையில் உருவாக்கப்பட்ட இத்தொடரானது உலகளாவிய ரசிகர்களின் விருப்பமிகு தொடராக மாறிவிட்டது.
இந்தத் தொடரின் இரண்டு சீசன்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன நிலையில், இயக்குநர் நாகா மீண்டும் 'ரமணி Vs ரமணி 3.0' என்ற புதிய மூன்றாவது சீசனுடன் வந்துள்ளார்.
இந்தத் தொடரில் முன்னணி நடிகர் ராம்ஜி மீண்டும் மிஸ்டர். ரமணியாக நடிக்கிறார். வாசுகி ஆனந்த் மிஸஸ் ரமணியாக நடிக்கிறார். இவர்களது மகளாக 'ராகிணி' பொன்னி சுரேஷ் நடிக்க, மகன் 'ராம்' வேடத்தில் பரம் குகனேஷ் நடிக்கிறார்.
முதல் இரண்டு பாகங்களைத் தயாரித்த கவிதாலயா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் தொலைக்காட்சி பிரிவான மின்பிம்பங்கள் இந்தப் புதிய மூன்றாவது சீசனையும் தயாரித்துள்ளது.
கோபு பாபு, பரத், விக்னேஷ்வரி ஆகியோர் இணைந்து திரைக்கதை வசனம் எழுதுகிறார்கள். சதீஷ் ஒளிப்பதிவு செய்ய, ரெஹான் இசையமைக்கிறார். வெளிவரவிருக்கும் புதிய தொடருக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர்.
இதையும் படிங்க: சூர்யாவுடன் நடித்ததில் பெருமை; மனம் திறந்த 'ஜெய்பீம்' ராவ் ரமேஷ்