சென்னை: ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் திரைப்படம் இறுதிகட்ட பணிகளை எட்டியுள்ளது.
நடிகர் சூர்யா தனது 2டி எண்டர்டெய்ன்மன்ட் நிறுவனம் மூலம் அமேசான் ஓடிடி தளத்திற்காக நான்கு படங்களை தயாரித்துள்ளார். அதில் ஒரு படமாக ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படம் தயாராகியுள்ளது.
இறுதிகட்ட பணிகளில் ரம்யா பாண்டியன் படம் ரம்யா பாண்டியன் நடித்துள்ள இப்படத்தை அரிசில் மூர்த்தி இயக்கியுள்ளார். பெரும் போராட்டத்தின் மத்தியில் தொலைந்த தனது காளைகளை கண்டுபிடிக்க வேண்டும், கிராமத்தையும் மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படும் குனிமுத்து என்ற அப்பாவி விவசாயி, அவரது மனைவி வீராயி குறித்த கதை இது. குனிமுத்துவின் நோக்கம் நிறைவேறியதா என்பதுதான் இறுதிகட்டம். இப்படம் செப்டம்பர் மாதம் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இறுதிகட்ட பணிகளில் ரம்யா பாண்டியன் படம் இதையும் படிங்க: வணங்காமுடி: யூத்தான அரவிந்த்சாமி!