பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துவரும் திரைப்படம் 'ஆர்.ஆர்.ஆர்'.
சுதந்திரப் போராட்ட வீரர்கள் அல்லூரி சீதாராம ராஜூ, குமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையைத் தழுவி உருவாகி வரும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.
கரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் கடந்த வாரம் தொடங்கியது.
இந்நிலையில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அதில், "ஆர்.ஆர்.ஆர் படத்தில் இன்னும் இரண்டு பாடல்களின் காட்சிகள் தவிர, மற்ற அனைத்துக் காட்சிகளின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ஜூனியர் என்.டி.ஆரும், ராம் சரணும் இணைந்து இரண்டு மொழிகளுக்கு டப்பிங் கொடுத்துவிட்டனர்.
விரைவில் மற்ற மொழிகளுக்குமான டப்பிங் பணிகளையும் முடித்துவிடுவார்கள்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னறிவிப்பு ஏதுமின்றி வெளியான 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் அப்டேட்டை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: முதல் டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட அனுபமா