மும்பை: பொதுமுடக்கத்தால் ஷூட்டிங்கை மிகவும் மிஸ் செய்வதாக நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், கீர்த்தி சனோன் ஆகியோர் கூறியுள்ள நிலையில், கேமரா முன்னாள் நிற்கும் அந்த நாளை எதிர்நோக்குவதாக தெரிவத்துள்ளனர்.
தென்னிந்திய சினிமா, பாலிவுட் சினிமா என கலக்கிவரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங், மார்ச் மாதம் நடைபெற்ற படப்பிடிப்பின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, கடந்த மார்ச் மாதம் கடைசியாக ஷூட்டிங்கில் பங்கேற்றேன். மீண்டும் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக இன்ஸ்டாகிராமில் ட்ரெயின் விட்டுள்ளார்.
உலகநாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2, சிவகார்த்திகேயன் ஜோடியாக அயலான் உட்பட இரண்டு இந்தி, ஒரு தெலுங்கு படத்தில் ரகுல் ப்ரீத் நடித்து வருகிறார்.
இதேபோல் பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஷூட் ஒன்றில் எடுக்கப்பட்ட பிளாக்-அண்ட் ஒயிட் புகைப்படத்தை பகிர்ந்து, கேமரா, லைட், ஆக்ஷன் உங்களை மிஸ் செய்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
- View this post on Instagram
Dear Lights, Camera, (Fan) & Action.. I miss you guys so much..❤️🎬🎥📸 #retrovibe
">