ETV Bharat / sitara

தர்பார் படத்தால் நஷ்டம் - பாதுகாப்பு கேட்கும் ஏ.ஆர். முருகதாஸ் - தர்பார்

சென்னை: தர்பார் படத்தால் ஏற்பட்ட இழப்பு விவகாரம் தொடர்பாக மிரட்டல் வருவதால் பாதுகாப்பு கோரி அப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தாக்கல் செய்த மனுவுக்கு பிப்ரவரி 10ஆம் தேதி விளக்கமளிக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

director
director
author img

By

Published : Feb 6, 2020, 12:40 PM IST

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படத்தை வெளியிட்டதில் இழப்பு ஏற்பட்டதாக வினியோகஸ்தர்கள் சிலர் குற்றஞ்சாட்டிவருகின்றனர். கடந்த மூன்றாம் தேதி, தேனாம்பேட்டையிலுள்ள இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் அலுவலகத்தின் முன்பும் சாலிகிராமத்திலுள் அவரது வீட்டின் முன்பும் விநியோகஸ்தர்கள் எனக் கூறி வந்த 25 அடையாளம் தெரியாத நபர்கள், அவருக்கு எதிராக முழக்கம் எழுப்பி பிரச்னை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, தன்னுடைய வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் காவல் துறை பாதுகாப்பு கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏ.ஆர். முருகதாஸ் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், லைகா நிறுவனத்திற்காகத் தர்பார் படத்தில் தான் இயக்குநராக மட்டுமே பணியாற்றியுள்ள நிலையில், படத்தின் திரையரங்கு உரிமை, சாட்டிலைட் உரிமை, விநியோக உரிமை போன்றவற்றில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இழப்பு ஏற்பட்டது தொடர்பாக லைகா நிறுவனத்தை அணுகாமல், தன்னை சிலர் மிரட்டி வருவதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கடந்த மூன்றாம் தேதி முதல் நடந்துவரும் அசம்பாவித நிகழ்வுகளைத் தடுக்க தனக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என பிப்ரவரி நான்காம் தேதி காவல் துறைக்கு மனு அளித்ததாகவும் அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முருகதாஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

காவல் துறை தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், இந்தச் சம்பவங்கள் இருவேறு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்துள்ளதால், இதுகுறித்து விளக்கம் பெற்று தெரிவிப்பதாகக் கூறினார்.

இதை ஏற்ற நீதிபதி, முருகதாஸின் கோரிக்கை மனு மீது எடுத்த நடவடிக்கை குறித்து பிப்ரவரி 10ஆம் தேதி விளக்கமளிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: 'தர்பார் படத்தால் ரூ.25 கோடி நஷ்டம்' - விநியோகஸ்தர்கள் புகார்

Intro:Body:தர்பார் பட நஷ்ட விவகாரம் தொடர்பாக மிரட்டல் வருவதால், பாதுகாப்பு கோரி இயக்குநர் முருகதாஸ் தாக்கல் செய்த மனுவுக்கு பிப்ரவரி 10ம் தேதி விளக்கமளிக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படத்தை வெளியிட்டதில் நஷ்டம் ஏற்பட்டதாக வினியோகிஸ்தர்கள் சிலர் குற்றம் சாட்டி வருகின்றன.

கடந்த 3 ம் தேதி, தேனாம்பேட்டையில் உள்ள இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் அலுவலகம் மற்றும் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பு, வினியோகஸ்தர்கள் எனக் கூறிக் கொண்டு வந்த 25 அடையாளம் தெரியாத நபர்கள், அவருக்கு எதிராக கோஷம் எழுப்பி பிரச்சனை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, தன்னுடைய வீட்டிற்கும், அலுவலகத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏ.ஆர். முருகதாஸ் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், லைகா நிறுவனத்திற்காக தர்பார் படத்தில் தான் இயக்குனராக மட்டுமே தான் பணியாற்றியுள்ள நிலையில், படத்தின் திரையரங்கு உரிமை, சாட்டிலைட் உரிமை, விநியோக உரிமை போன்றவற்றில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், நஷ்டம் ஏற்பட்டது தொடர்பாக லைகா நிறுவனத்தை அணுகாமல், தன்னை சிலர்
மிரட்டி வருவதாக குற்றம் சாட்டி இருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கடந்த 3ம் தேதி முதல் இச்சம்பவங்கள் நடந்து வருவதாகவும், அசம்பாவித சம்பவங்களை தடுக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என பிப்ரவரி 4ம் தேதி காவல் துறைக்கு மனு அளித்ததாகவும், அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முருகதாஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

காவல் துறை தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், இந்த சம்பவங்கள் இரு வேறு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்துள்ளதால், இதுகுறித்து விளக்கம் பெற்று தெரிவிப்பதாக தெரிவித்தார்.

இதை ஏற்ற நீதிபதி, முருகதாசின் கோரிக்கை மனு மீது எடுத்த நடவடிக்கை குறித்து எடுத்த நடவடிக்கை தொடர்பாக பிப்ரவரி 10ம் தேதி விளக்கமளிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.