ETV Bharat / sitara

ஹேண்ட்சம் வில்லன் - ரஜினி பாராட்டால் உச்சி குளிர்ந்த நடிகர் - காப்பான் சிறப்பு காட்சி

ரஜினி என்னைப் பாராட்டியதே விருது கிடைத்த உணர்வு ஏற்பட்டுள்ளது என்று காப்பான் படத்தில் வில்லனாக மிரட்டிய நடிகர் சிராக் கூறியுள்ளார்.

காப்பான் பட வில்லன் சிராக்
author img

By

Published : Oct 9, 2019, 9:30 AM IST

சென்னை: காப்பான் படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வில்லன் நடிகரை பாராட்டியுள்ளார்.

கடந்த மாதம் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் வெளியான ஆக்ஷன் திரைப்படமான காப்பான் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. இந்தப் படத்தில் சூர்யா கதையின் நாயகனாக பிரதமரின் பாதுகாவலராகவும், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நாட்டின் பிரதமர் வேடத்திலும் தோன்றினார்கள். நடிகர்கள் ஆர்யா, சமுத்திரகனி, இந்திப் பட நடிகர் போமன் இரானி, சாயிஷா, பூர்ணா உள்ளி்ட்ட பலரும் படத்தில் நடித்திருந்தனர்.

பிரதமரின் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளையும் பிரதமர் பாதுகாப்புக்காக அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் ஆக்ஷன் கலந்த த்ரில்லர் பாணியில் காப்பான் படத்தில் காட்டப்பட்டிருந்தது. படத்தில் வில்லனாக சிராக் ஜானி என்பவர் நடித்திருந்தார்.

Kaappaan villian Chirag
காப்பான் பட வில்லன் சிராக்

இந்தப் படத்தை தயாரித்த லைகா நிறுவனம் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் தர்பார் படத்தையும தயாரித்துவருகிறது. இதையடுத்து காப்பான் படத்தின் சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு படத்தை ரஜினிகாந்த் பார்த்து ரசித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து அந்தப் படத்தில் வில்லனாக மிரட்டிய நடிகர் சிராக் ரஜினியை சந்தித்த நிலையில், ஹேண்ட்சம் வில்லன் என்று அவர் சிராக்கை பாராட்டியுள்ளார்.

Rajinikanth praises actor chirag
காப்பான் பட வில்லன் சிராக்கை பாராட்டிய ரஜினி

மேலும், மிகவும் சிறப்பாக நடித்துள்ளீர்கள். சினிமாவில் உங்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Rajinikanth with actor Chirag
ரஜினிகாந்துடன் காப்பான் வில்லன் சிராக்

இதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த சிராக், ரஜினி என்னைப் பற்றி கூறியிருப்பது எனக்கு விருது கிடைத்தது போல் உணர்வு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Intro:Body:

ஹேண்ட்சம் வில்லன் - ரஜினி பாராட்டால் உச்சி குளிர்ந்த நடிகர்

ரஜினி என்னைப் பாராட்டியதே விருது கிடைத்த உணர்வு ஏற்பட்டுள்ளது என்று காப்பான் படத்தில் வில்லனாக மிரட்டிய நடிகர் சிராக் கூறியுள்ளார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.