ETV Bharat / sitara

தந்தை ஸ்தானித்தில் கர்ப்பிணி ரசிகைக்கு வளையல் அணிவித்த 'தர்பார்' - தர்பார் பெங்கல்

கர்ப்பிணி ரசிகையின் ஆசையை நிறைவேற்றும் வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வளைகாப்பு வளையல் அணிவித்து அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

darbar
darbar
author img

By

Published : Dec 16, 2019, 11:38 PM IST

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் ‘தர்பார்’. இதில் பிரதிக் பப்பார், சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். பொங்கல் வெளியீடாக இப்படம் திரைக்கு வர உள்ளது.

இதனயைடுத்து இப்படத்தின் கடைசிகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்தது. அப்போது படப்பிடிப்பு தளத்திற்கு தென் சென்னை ரஜினி மக்கள் மன்ற துணை செயலாளர் ராகவா விக்னேஷூம் அவரது மனைவி ஜெகதீஸ்வரியும் வந்துள்ளனர். நிறைமாத கர்ப்பிணியான ஜெகதீஸ்வரி ரஜினியிடம் தந்தை ஸ்தானத்தில் இருந்து வளைகாப்பு வளையல் அணிவிக்கும்படி கேட்டிருக்கிறார்.

உடனே ரஜினியும் வளைகாப்பு வளையலை அவரது கைகளில் அணிவித்து வாழ்த்தியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ராகவா விக்னேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், நிறைமாத கர்ப்பிணியான என் மனைவியின் ஆசையை ஒரு தகப்பன் ஸ்தானத்தில் இருந்து நிறைவேற்றிய என் அன்பு தலைவருக்கு சிரம் தாழ்த்த நன்றிகள். கருவிலே தலைவரின் ரசிகனாய் இருக்கும் 3ஆம் தலைமுறை ரசிகனுக்கு தலைவரின் பொற்கரங்களால் வளைகாப்பு விழா. என்று ட்விட்டும் செய்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகிவருகின்றது. ரஜினியின் இந்த செயலை ரசிகர்கள் பாராட்டியும் கொண்டாடியும் வருகின்றனர்.

இதையும் வாசிங்க: விஜய்க்காக எழுதப்பட்ட கதையில் நடிக்கிறாரா ரஜினி?

Intro:Body:

https://twitter.com/Ragavavignesh1/status/1206285354455592962

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.