வீடு வாங்கிக் கொடுப்பதில் கலைஞானத்தைவிட தீவிரமாக இருந்தார் ரஜினி. அந்த விழாவில் பேசிய மறுநாளே வீடு வாங்குவதற்கான தொகைக்கு காசோலை போட்டு ராகவேந்திரா மண்டப அலுவலகத்தில் கொடுத்துவிட்டுத்தான் ‘தர்பார்’ படப்பிடிப்புக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை விருகம்பாக்கம் வெங்கடேசன் நகர், விநாயகம் தெருவில் அமைந்துள்ள அமுதினி ஃபிளாட்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் ஆயிரத்து 320 சதுரடியில் மூன்று படுக்கையறைகளும் இரண்டு கார் பார்க்கிங் வசதியும் கொண்ட வீடு வாங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இன்று காலை பத்து மணிக்கு, தான் வாங்கிக் கொடுத்த புதுவீட்டுக்கு நடிகர் ரஜினிகாந்த் வந்தார். அப்போது அவருக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார் கலைஞானம். புது வீட்டின் பூஜை அறையில் குத்துவிளக்கேற்றினார் ரஜினி. கூடவே பாபா படம் ஒன்றையும் பரிசளித்தார்.
![Kalaignanam family welcomes rajinikanth](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4678241_50_4678241_1570439245174.png)
அதன் பின் ரஜினிக்கு இனிப்பு கொடுத்து தன் குடும்பத்தினரை ரஜினிக்கு அறிமுகம் செய்துவைத்தார் கலைஞானம்.
![Rajinikanth bought a house for Kalaignanam and visited today](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4678241_336_4678241_1570439228828.png)
பின்னர் வீட்டைச் சுற்றிப்பார்த்த ரஜினி, 'வீடு தெய்வீகமா இருக்கு' என்று தனது மகிழ்ச்சியை கலைஞானத்திடம் தெரிவித்தார்.