'தர்பார்' படத்திற்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் 'அண்ணாத்த'. சிறுத்தை சிவா இயக்கிய இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தப் படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ், ஜகபதி பாபு, சதீஷ் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி. இமான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னை, லக்னோ, கொல்கத்தா ஆகியப் பகுதிகளில் நடந்துமுடிந்த நிலையில், போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன.
-
#AnnaattheAnnaatthe - The first single from #Annaatthe is here: https://t.co/30YYUr8vgy@rajinikanth @directorsiva #SPBalasubrahmanyam #Nayanthara @KeerthyOfficial @immancomposer @Viveka_Lyrics @AntonyLRuben @dhilipaction @vetrivisuals #PremRakshith #AnnaattheFirstSingle
— Sun Pictures (@sunpictures) October 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#AnnaattheAnnaatthe - The first single from #Annaatthe is here: https://t.co/30YYUr8vgy@rajinikanth @directorsiva #SPBalasubrahmanyam #Nayanthara @KeerthyOfficial @immancomposer @Viveka_Lyrics @AntonyLRuben @dhilipaction @vetrivisuals #PremRakshith #AnnaattheFirstSingle
— Sun Pictures (@sunpictures) October 4, 2021#AnnaattheAnnaatthe - The first single from #Annaatthe is here: https://t.co/30YYUr8vgy@rajinikanth @directorsiva #SPBalasubrahmanyam #Nayanthara @KeerthyOfficial @immancomposer @Viveka_Lyrics @AntonyLRuben @dhilipaction @vetrivisuals #PremRakshith #AnnaattheFirstSingle
— Sun Pictures (@sunpictures) October 4, 2021
இப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான 'அண்ணாத்த...அண்ணாத்த' பாடல் இன்று (அக்.04) வெளியாகியுள்ளது.
விவேகா எழுதிய பாட்டிற்கு மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். இப்பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் #AnnaattheFirstSingle என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.
'அண்ணாத்த' திரைப்படம் தீபாவளி கொண்டாட்டமாக நவம்பர் 4ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது.