ETV Bharat / sitara

என்னுள் இன்னொரு ரஜினியை காட்டியவர் மகேந்திரன்: ரஜினி உருக்கம்

சென்னை: எனக்குள் இருந்த இன்னொரு ரஜினியை எனக்கு காட்டியவர் இயக்குநர் மகேந்திரன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

rajini
author img

By

Published : Apr 2, 2019, 12:50 PM IST

Updated : Apr 2, 2019, 1:22 PM IST

'முள்ளும் மலரும்', 'உதிரிப்பூக்கள்', 'ஜானி' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் அழுத்தமான தடம் பதித்தவர் இயக்குநர் மகேந்திரன். உடல்நலக்குறைவால் மார்ச்26ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு ஒட்டுமொத்த திரையுலகும் இரங்கல் தெரிவித்துவருகிறது. மேலும், பள்ளிக்கரணையில் வைக்கப்பட்டிருக்கும் அவரது உடலுக்கு பலர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் மகேந்திரன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என்னுள் இருந்த இன்னொரு ரஜினியை எனக்கு காட்டியவர் மகேந்திரன். நடிப்பின் புதிய பரிணாமத்தை காட்டியவர் அவர். அவரது இழப்பு தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பு” என்றார்.

முன்னதாக இயக்குநரும், நடிகருமான பாக்யராஜும் மகேந்திரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

Intro:Body:

body 

Conclusion:
Last Updated : Apr 2, 2019, 1:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.