ETV Bharat / sitara

காதலர் தினத்தில் ரிலேஷன்ஷிப் பற்றி மனம்திறக்கும் ரைசா - வெறித்தனமான வெயிட்டிங்கில் ஜிவி பிரகாஷ் - ரைசா புதிய படம்

ரைசாவின் ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் அப்டேட் குறித்து நடிகை ஓவியா, ஜிவி பிரகாஷ் என பிரபலங்கள் அடுத்தடுத்து வீடியோவை வெளியிட்டு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

Raiza to reveal her relationship status
Actress Raiza
author img

By

Published : Feb 13, 2020, 3:25 PM IST

சென்னை: காதலர் தினத்தில் தனது ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸை நடிகை ரைசா வெளியிடவுள்ளாராம். இதையடுத்து அதை எதிர்நோக்கி காத்திருப்பதாக நடிகர், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

'பிக் பாஸ்' முதல் சீசன் மூலம் பிரபலமான மாடல் ரைசா, 'பியார் பிரேமா காதல்' படம் மூலம் கதாநாயகியாக உருவெடுத்தார். தற்போது எஃப்ஐஆர், காதலிக்க யாருமில்லை, ஆலிஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

'பிக் பாஸ்' முதல் சீசன் போட்டியாளர் கணேஷ் வெங்கடராமனின் மனைவியும், டிவி தொகுப்பாளருமான நிஷா, காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதி தனது தோழி ரைசா, தன்னுடைய ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸை தெரிவிக்கவுள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதேபோல் 'பிக் பாஸ்' மூலம் ரசிகர்கள் மனம் கவர்ந்த நடிகை ஓவியாவும், காதலர் தினத்தில் ரைசா ஸ்பெஷல் அறிவிப்பை வெளியிட இருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதுஒருபுறமிருக்க, நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ், தனது ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் குறித்து பல க்ளூக்களை கூறியிருக்கிறார் ரைசா. எனவே அவர் என்ன சொல்லபோகிறார் என்பதை எதிர்நோக்கி ஆர்வமாக இருப்பதாகக் கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாடவிருக்கும் நிலையில், 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் தனது க்யூட் தருணங்களால் ரசிகர்களைக் கவர்ந்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் ரைசா, இந்த வீடியோக்களை தனது ட்விட்டரில் ஷேர் செய்து வருகிறார்.

இதையடுத்து ரசிகர்களும் இதுபற்றி பல வித்தியாசமான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

ஜிவி பிரகாஷும் - ரைசாவும் இணைந்து 'காதலிக்க யாருமில்லை' என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். அந்தப் படத்தை பிரபலப்படுத்துவதற்காகவே ரைசா ரிலேஷன்ஷிப் குறித்து ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கலாம் எனத் தெரிகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.