நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.
இந்தநிலையில், சென்னை வேளச்சேரி கிழக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பாக ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் சிறப்பு கோபூஜை வழிபாடு நடத்தப்பட்டது.
கோ பூஜை வழிபாட்டில் ரஜினியின் தீவிர ரசிகரும், நடிகருமான ராகவா லாரன்ஸ், இயக்குனர் சாய்ரமணி மற்றும் ரஜினி ரசிகர்கள் பலர் கலந்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து இன்று பிற்பகல் அன்னதான நிகழ்வும் நடைபெறகிறது.
-
Happy Birthday Thalaiva...@rajinikanth pic.twitter.com/Qt99YCOWEC
— Raghava Lawrence (@offl_Lawrence) December 11, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Happy Birthday Thalaiva...@rajinikanth pic.twitter.com/Qt99YCOWEC
— Raghava Lawrence (@offl_Lawrence) December 11, 2019Happy Birthday Thalaiva...@rajinikanth pic.twitter.com/Qt99YCOWEC
— Raghava Lawrence (@offl_Lawrence) December 11, 2019
ரஜினியின் பிறந்தநாளையொட்டி, ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டரில் வீடியோ வாழ்த்து செய்தி ஒன்றையும் பகிர்ந்திருக்கிறார்.