திரைப்படத்துறையில் நடன ஆசிரியர், நடிகர், இயக்குநர் என பன்முகம் கொண்டவர் நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் திரைப்பணியை தவிர்த்து பல்வேறு சமூக சேவைகளிலும், ஆதவரற்றோருக்கு உதவிக்கரம் நீட்டும் நபராகவும் இருந்து வருகிறார்.
குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரின் பேரன்பைப் பெற்றிருக்கும் ராகவா லாரன்ஸ் இயலாதவர்களுக்கு தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வருகிறார்.
-
Hi Friends and Fans..
— Raghava Lawrence (@offl_Lawrence) December 9, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
2 days back I posted that I will meet our Honourable Health Minister Dr. C. Vijaya Baskar sir regarding the help requests I have been receiving. pic.twitter.com/e96yMynH2h
">Hi Friends and Fans..
— Raghava Lawrence (@offl_Lawrence) December 9, 2019
2 days back I posted that I will meet our Honourable Health Minister Dr. C. Vijaya Baskar sir regarding the help requests I have been receiving. pic.twitter.com/e96yMynH2hHi Friends and Fans..
— Raghava Lawrence (@offl_Lawrence) December 9, 2019
2 days back I posted that I will meet our Honourable Health Minister Dr. C. Vijaya Baskar sir regarding the help requests I have been receiving. pic.twitter.com/e96yMynH2h
இந்த நிலையில், தனது சமூக வலைதளப்பக்கத்தில் சில செய்திகளைக் கண்டுள்ளார். அதில், கண் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு மருத்துவ செலவுக்காக உதவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதனைக்கண்டு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என எண்ணிய நடிகர் ராகவா லாரன்ஸ், தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி முதலமைச்சரையும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரையும் சந்தித்து உதவிகோர நினைத்தார்.
மேலும், குழந்தைகளுக்கான மருத்துவ உதவிகள் தொடர்பாக, இன்று தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை அவரது இல்லத்தில் சந்தித்து லாரன்ஸ் உதவிகோரியுள்ளார். இந்த சந்தப்பின் போது, அமைச்சர் விஜயபாஸ்கர், தன்னால் முடிந்த உதவியை செய்வதாகவும், உறுதுணையாக இருப்பேன் எனவும் கூறியிருக்கிறார்.
‘மருத்துவ இட ஒதுக்கீடு முறையில் மாற்றம் இல்லை’ - அமைச்சர் உறுதி