ETV Bharat / sitara

'நடிகனுக்கு கட்டுப்பாடுகளை விதிக்காதீர்கள்' - விஜய்சேதுபதிக்கு ஆதரவு தெரிவித்த ராதிகா! - விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன்

சென்னை: விஜய் சேதுபதி நடிப்பில் உருவாக உள்ள '800' திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக நடிகை ராதிகா கருத்து தெரிவித்துள்ளார்.

ராதிகா
ராதிகா
author img

By

Published : Oct 16, 2020, 4:55 PM IST

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் '800' என்ற படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கும் இப்படத்தை டார் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இரு நாள்களுக்கு முன்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் விஜய் சேதுபதிக்கு எதிரான கருத்துகளும், கோரிக்கைகளும் குவியத் தொடங்கியுள்ளன
சிங்கள அரசுக்கும், ராஜபக்ச அரசுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த முத்தையா முரளிதரனின் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை ஏற்க முடியாது என திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்பட பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ராதிகா ட்வீட்
ராதிகா ட்வீட்
இந்நிலையில் நடிகை ராதிகா '800' விஜய் சேதுபதி நடிப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில், "முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றில் விஜய் சேதுபதியை நடிக்க வேண்டாம் என்று சிலர் கூறுகின்றனர். இவர்களுக்கு வேறு வேலை இல்லையா. அரசியல் பின்புலம் கொண்ட ஒரு தமிழரின் சன்ரைசர்ஸ் அணியில் தலைமை பயிற்சியாளராக அவர் எப்படி இருக்கிறார் என்று அந்த அணியை கேட்கலாமே. விஜய் சேதுபதி ஒரு நடிகர். ஒரு நடிகனுக்கு கட்டுப்பாடுகளை விதிக்காதீர்கள். விஜய் சேதுபதி, கிரிக்கெட் இரண்டிலும் முட்டாள்தனங்களை திணிக்காதீர்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.