தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்த ராதிகா ஆப்தே தற்போது இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். 'ஸ்லீப் வாக்கர்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இக்குறும்படத்தில் சஹானா கோஸ்வாமி, குல்ஷன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இவரது குறும்படம், பாம் ஸ்பிரிங் சர்வதேச திரைப்பட விழாவில், பெஸ்ட் மிட்நைட் சாட் என்ற பிரிவின்கீழ் பரிசை வென்றுள்ளது. இந்த செய்தியை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
ராதிகா ஆப்தே இயக்கிய முதல் குறும்படமே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் அவரது ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.