கரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் பலரும் வறுமையால் வாடி வருகின்றனர். சிலரோ உண்ண உணவின்றி தங்களது ஒருநாள் பொழுதை கழிக்கத் தவித்து வருகின்றனர்.
இவ்வாறு சிரமப்படுபவர்களுக்கு திரையுலக பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்துவருகின்றனர்.
அந்தவகையில் நடிகை ராஷி கண்ணா ஹைதராபாத்தில் உள்ள ஏழை மக்களுக்குத் தினமும் உண்ண உணவு கொடுத்து உதவி செய்துவருகிறார்.
இதற்காக ரொட்டி வங்கு என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி தினமும் 1,200 பேருக்கு உணவளித்து வருகிறார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “உணவு அளிக்க நன்கொடை கொடுத்த அனைவருக்கும் ஒரு பெரிய நன்றி. நன்கொடையளித்த ஒவ்வொரு காசும், தினமும் 1,200 மக்களுக்கு ரொட்டி வங்கி உணவளிக்க உதவியுள்ளது.
தொடர்ந்து ஆதரவளிக்கவும் நாங்கள் இல்லையென்றால், யார், இப்போது இல்லையென்றால், எப்போது” என ஜே.லூயிஸின் வாசகத்தைக் குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்தச் சேவையை பலரும் பாராட்டிவருகின்றனர்.
இதையும் படிங்க: விஜய்யின் மகன், மகள் ட்விட்டரில் இணைந்துவிட்டார்களா?