சீனா, உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்த வைரஸ் தாக்குதல், உலக மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 5000-க்கும மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் கரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து தப்பிக்க பார்த்திபன் சில வழிமுறைகளைக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவரது பதிவில் கூறியிருப்பதாவது, 'கரோனா வைரஸ் அதிகமாகப் பரவ தொடங்கியிருப்பதால் ஆயுர்வேதம், சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள முன்னெச்சரிக்கைகள் மூலம் விஷ காய்ச்சலிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்வது எப்படி?' என்று குறிப்பிட்டுள்ளார்.
-
தமிழிலும்... pic.twitter.com/kz2D3FQotq
— Radhakrishnan Parthiban (@rparthiepan) January 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">தமிழிலும்... pic.twitter.com/kz2D3FQotq
— Radhakrishnan Parthiban (@rparthiepan) January 28, 2020தமிழிலும்... pic.twitter.com/kz2D3FQotq
— Radhakrishnan Parthiban (@rparthiepan) January 28, 2020
நிலவேம்பு கசாயம், கருமிளகு, கிருஷ்ண துளசி உள்ளிட்ட மூலிகைகளை எவ்வாறு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் . நடிகர் பார்த்திபனின் இந்தப் பதிவிற்கு அனைவரும் நன்றி தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: சீனாவை அச்சுறுத்திவரும் கரோனா: மருந்து தயார்... இந்தியாவிலிருந்து கிளம்பும் போதி தர்மர்!