சென்னை: தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல் இன்று (பிப்ரவரி 27) நடைபெற்றது. இத்தேர்தலில் இயக்குநர் பாக்யராஜ் தலைமையிலான இமயம் அணியும், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தலைமையிலான புதுவசந்தம் அணியும் போட்டியிட்டன.
வாக்கு எண்ணிக்கை மாலையில் நடைபெற்றது. இதில் 1430 வாக்குகள் பதிவானது. தபால் வாக்குகள் -106 சேர்த்து மொத்த வாக்குகள்- 1536 ஆகும். புது வசந்தம் அணியின் சார்பாகத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே. செல்வமணி 955 வாக்குகளைப் பெற்றார். இமயம் அணி சார்பாகத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட பாக்கியராஜ் 566 வாக்குகளைப் பெற்றார்.
15 சுற்றுகளாக எண்ணப்பட்ட வாக்குகளின் முடிவில் புது வசந்தம் அணியைச் சேர்ந்த ஆர்.கே. செல்வமணி 389 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாக்கியராஜை தோல்வியடையச் செய்தார். பின்னர் வெற்றிச் சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இருந்து ஆர்.கே. செல்வமணி பெற்றுக்கொண்டார்.
இதையும் படிங்க: படம் வெற்றிபெற நல்ல கதை முக்கியம் - கே.ராஜன்!