இயக்குநர் குவெண்டின் டேரண்டினோவின் மனைவி டேனியெல்லா பிக் தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில், சினிமா வாழ்க்கையைத் தாண்டி தன் தனிப்பட்ட வாழ்வில் அதிக கவனம் செலுத்த விரும்புவதாக குவெண்டின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், ஒரு நல்ல கணவனாகவும், நல்ல தந்தையாகவும் தனது வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டிய நேரம் தற்போது வந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
இனி தன் குடும்பத்தை படப்பிடிப்பு நடக்கும் ஊர்களுக்கு அழைத்துச் சென்று அலைக்கழிக்கமாட்டேன் என்றும், செல்லும் இடங்களில் இருந்து வீட்டிற்கு அக்கறையுடன் கடிதம் எழுதும் மனிதனாக இருக்க முயற்சிப்பேன் என்றும் டேரண்டினோ தெரிவித்துள்ளார். ஹாலிவுட்டில் பெரும் பாராட்டுகளைப் பெற்ற ரிசெர்வாய்ர் டாக்ஸ், பல்ப் ஃபிக்ஷன், ஜேங்கோ அன்செய்ண்ட் போன்ற பல ஜானரைக் கொண்ட படங்களை இயக்கியுள்ள டேரண்டினோ, சினிமாவில் தன்னுடைய காலம் முடிந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
“இயக்கம் என்பது குறைந்த வயதுடையவர்களுக்கானது. சினிமா தற்போது மாறிக்கொண்டிருக்கிறது. வயதானவர்களின் பட்டியலில் இணைந்துள்ளதை நான் உணர்கிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.
56 வயதாகும் டேரண்டினோ, முன்னதாக தனது பத்தாவது திரைப்படத்திற்குப் பிறகு திரைத்துறையிலிருந்து விலக முடிவெடுத்துள்ளதாக அறிவித்திருந்தார்.
இதையும் படிங்க: வருட டேட்டிங்: 52 வயதில் 5ஆவது திருமணம் செய்துகொண்ட பமீலா ஆண்டர்சன்