மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கும் முயற்சி கோலிவுட் வட்டாரத்தில் நடைபெற்று வருகிறது.
இயக்குநர் பிரியதர்ஷினி இயக்கத்தில் ஜெ.வாக நித்யா மேனன் நடித்து வருகிறார். அதேபோல் இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடித்து வருகிறார்.
சமீபத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகியுள்ள தலைவி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் டீஸரும் சமீபத்தில் வெளிவந்து, மக்கள் மத்தியில் பேசு பொருளானது.
படத்தின் டீஸர் வெளியானதிலிருந்தே கங்கனா ரனாவத்தின் மேக் அப் செய்யப்பட்ட தோற்றத்தை நெட்டிசன்கள் கிண்டலடித்து வந்தனர். காரணம் 'சோட்டா பிம்' கார்டூனில் வரும், டுன் டுன் ஆன்ட்டி, 'பதாய் ஹோ பதாய்' திரைப்படத்தில் வரும் குண்டு தோற்றத்தைக் கொண்ட அனில் கபூர், ஸ்மிருதி இரானி ஆகியோருடன் கங்கனாவின் தோற்றம் ஒப்பிடப்பட்டு கிண்டலடிக்கப்பட்டது.
இந்நிலையில் இயக்குநர் கெளதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையத் தொடராக இயக்கியுள்ளார். இதில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணண் நடித்துள்ளார்.
இத்தொடருக்கு 'குயின்' என்று பெயர் வைத்துள்ளார். இதில் முக்கிய கேரக்டரில் மலையாள நடிகர் இந்திரஜித் நடித்துள்ளார். இத்தொடரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
வெப் சீரிஸ் தொடராக வெளிவரவிருக்கும் குயின், 11 எபிசோடுகளாக எம்எக்ஸ் பிளேயர் ஆன்லைன் ஸ்டீரிமிங் தளத்தில் வெளியிடப்படவுள்ளது. இந்தத் தொடரில் கிடாரி படப்புகழ் பிரசாத் முருகேசன் மற்றொரு இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.
-
மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவி, சினிமாவின் சூப்பர் ஸ்டார் கதாநாயகி, இளம் முதலமைச்சர். ஒரு மகாராணியின் கதையின் பரபரப்பான பக்கங்கள் உங்களுக்காகவே! #QueenIsComing@meramyakrishnan @menongautham @Murugesanprasad#Queen #MXOriginalSeries #MXPlayer #Ace2Three #FanFight pic.twitter.com/digaPUNhTA
— MX Player (@MXPlayer) December 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவி, சினிமாவின் சூப்பர் ஸ்டார் கதாநாயகி, இளம் முதலமைச்சர். ஒரு மகாராணியின் கதையின் பரபரப்பான பக்கங்கள் உங்களுக்காகவே! #QueenIsComing@meramyakrishnan @menongautham @Murugesanprasad#Queen #MXOriginalSeries #MXPlayer #Ace2Three #FanFight pic.twitter.com/digaPUNhTA
— MX Player (@MXPlayer) December 1, 2019மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவி, சினிமாவின் சூப்பர் ஸ்டார் கதாநாயகி, இளம் முதலமைச்சர். ஒரு மகாராணியின் கதையின் பரபரப்பான பக்கங்கள் உங்களுக்காகவே! #QueenIsComing@meramyakrishnan @menongautham @Murugesanprasad#Queen #MXOriginalSeries #MXPlayer #Ace2Three #FanFight pic.twitter.com/digaPUNhTA
— MX Player (@MXPlayer) December 1, 2019
இதனையடுத்து இந்த வெப் சீரிஸின் மினி டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. 26 நொடிகள் கொண்ட அந்த டீஸரில், ஜெயலலிதாவின் பள்ளிப்பருவம், திரைத்துறை வாழ்க்கை, அரசியல் என அனைத்தும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. ஆனால், ஆரம்பம் முதலே முகத்தை காட்டாமல் டீசரை முடித்துள்ளனர். மெயின் ட்ரெய்லர் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு டீஸரில் இடம் பெற்றுள்ளது.
தலைவியில் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் சரியாக பொருந்தவில்லை எனக் கூறப்படும் வேளையில், குயின் வெப் சீரிஸில் ரம்யாகிருஷ்ணன் சரியாக பொருந்துவரா என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.