ETV Bharat / sitara

அமேசான் ப்ரைமில் வெளியாகும் 'புத்தம் புது காலை'

சென்னை: ஐந்து முன்னணி இயக்குநர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஆந்தாலஜி திரைப்படமான 'புத்தம் புது காலை' அமேசான் ப்ரைமில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

author img

By

Published : Sep 30, 2020, 7:05 PM IST

புத்தம் புது காலை
புத்தம் புது காலை

அனுஷ்காவின் 'நிசப்தம்', கீர்த்தி சுரேஷின் 'பெண் குயின்', ஜோதிகாவின் 'பொன்மகள் வந்தாள்' போன்ற படங்களின் ஓடிடி வெளியீட்டை தொடர்ந்து அமேசான் ப்ரைம் வீடியோ முதன்முதலாக ஆந்தாலஜி படமொன்றை வெளியிடவுள்ளது.

முழுக்க முழுக்க கரோனா ஊரடங்கு காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த படத்தில் நம்பிக்கை, காதல் மற்றும் புதிய தொடக்கங்களை பேசும் படமாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

புத்தம் புது காலை
புத்தம் புது காலை
'புத்தம் புது காலை' என்ற தலைப்பில் ஆந்தாலஜி படத்தை சுதா கொங்கரா, கவுதம் மேனன், சுஹாசினி மணி ரத்னம், ராஜீவ் மேனன் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் ஆகிய ஐந்து இயக்குநர்கள் இயக்கியுள்ளனர். வாழ்க்கையின் ஒரு புதிய தொடக்கம், இரண்டாவது வாய்ப்பு, நம்பிக்கையை பற்றின கதைகளை கொண்டு இந்த கோவிட்-19 ஊரடங்கு காலத்தில் படமாக்கப்பட்டுள்ளது. ஐந்து குறும்படங்களின் தொகுப்பாக உருவாகியுள்ள 'புத்தம் புது காலை' திரைப்படம் அக்டோபர் மாதம் 16ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகிறது.
'புத்தம் புது காலை' படத்திலுள்ள 5 குறும்படங்கள் விவரங்கள் இதோ, 'இளமை இதோ இதோ' - சுதா கொங்கரா இயக்கியுள்ளார். காளிதாஸ் ஜெயராம், ஊர்வசி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்துள்ளனர். 'அவரும் நானும் - அவளும் நானும்' இந்த குறும்படத்தை கௌதம் மேனன் இயக்கியுள்ளார். எம்.எஸ்.பாஸ்கர், ரீத்து வர்மா ஆகியோர் நடித்துள்ளனர். 'காஃபி, எனி ஒன்?'- சுஹாசினி மணி ரத்னம் இயக்கி நடித்துள்ளார். அவருடன் அனு ஹாசன், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர். 'ரீயூனியன்' குறும்படத்தை ராஜீவ் மேனன் இயக்கியுள்ளார். ஆண்டிரியா லீலா சாம்சன், சிக்கில் குருச்சரன் ஆகியோர் நடித்துள்ளனர். 'மிராக்கிள்' குறும்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இதில், பாபி சிம்ஹா, முத்துக்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.