ஒரே தலைப்பின் கீழ் பல்வேறு இயக்குநர்கள் இணைந்து "ஆந்தாலஜி" திரைப்படத்தை இயக்குவது தற்போது உள்ள காலகட்டத்தில் ட்ரெண்டாகிவிட்டது. அந்தவகையில் ராஜீவ் மேனன், கவுதம் மேனன், சுஹாசினி மணிரத்னம், கார்த்திக் சுப்புராஜ், சுதா கொங்கரா ஆகியோர் இயக்கியுள்ள படம் 'புத்தம் புது காலை'.
காளிதாஸ் ஜெயராம், ஜெயராம், ஆண்ட்ரியா, ஸ்ருதி ஹாசன், அனு ஹாசன், சுஹாசினி, எம்.எஸ். பாஸ்கர், ரிட்டு வர்மா உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். ஐந்து குறும்படங்களின் தொகுப்பாக உருவாகியுள்ள இத்திரைப்படம் இன்று(அக்.16) அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ளது.
-
#PuthamPudhuKaalai is like a mini film festival! Loved these films by some of my favourite directors.
— Aditi Rao Hydari (@aditiraohydari) October 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Filled with hope and love... ♥️@menongautham, #SudhaKongara, @DirRajivMenon, @hasinimani, @karthiksubbaraj @PrimeVideoIN
Ps - Rooting for you @shal_shankar 🤗 pic.twitter.com/7KEwZ3hgxY
">#PuthamPudhuKaalai is like a mini film festival! Loved these films by some of my favourite directors.
— Aditi Rao Hydari (@aditiraohydari) October 15, 2020
Filled with hope and love... ♥️@menongautham, #SudhaKongara, @DirRajivMenon, @hasinimani, @karthiksubbaraj @PrimeVideoIN
Ps - Rooting for you @shal_shankar 🤗 pic.twitter.com/7KEwZ3hgxY#PuthamPudhuKaalai is like a mini film festival! Loved these films by some of my favourite directors.
— Aditi Rao Hydari (@aditiraohydari) October 15, 2020
Filled with hope and love... ♥️@menongautham, #SudhaKongara, @DirRajivMenon, @hasinimani, @karthiksubbaraj @PrimeVideoIN
Ps - Rooting for you @shal_shankar 🤗 pic.twitter.com/7KEwZ3hgxY
நம்பிக்கை, காதல், புதிய தொடக்கங்களை பேசும் படமாக வெளியாகியுள்ள இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நீண்ட நாள்களாக நல்ல திரைப்படத்தை எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இதுஒரு நல்ல ட்ரீட்டாக கிடைத்துள்ளது. மேலும் இப்படத்தில் நடித்த அனைவருமே தங்களது நடிப்பை கச்சிதமாக நடித்துள்ளனர் என்றும், படத்தின் கதைகள் அருமையாக உள்ளது என்று நெட்டிசன்கள் ட்விட்டரில் தங்களின் கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ”7ஜி ரெயின்போ காலனியை இன்றைய சூழலில் சொல்ல ஆசை!” - இயக்குநர் செல்வராகவன்