நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் டிசம்பர் 17ஆம் தேதி வெளியான திரைப்படம் புஷ்பா. இதில் ஃபகத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். செம்மரக் கடத்தலை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியானது.
தேவிஸ்ரீபிரசாத் இசையில் உருவான அனைத்து பாடல்களும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக, தியேட்டர்களில் 50 விழுக்காடு பார்வையாளர்களுக்கே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், திரையரங்குகளில் வெளியாகி 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது.
இந்நிலையில் 'புஷ்பா' உலகளவில் 365 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இதனால் அல்லுஅர்ஜூன் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: புனித் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்திய அல்லு அர்ஜூன்!