ETV Bharat / sitara

Karnataka Ratna Puneeth Rajkumar; மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது அறிவிப்பு! - கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார்-ஐ (Karnataka Ratna Puneeth Rajkumar) கெளரவிக்கும் விதமாக கர்நாடக ரத்னா விருது வழங்கப்படும் என கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

Puneeth Rajkumar
Puneeth Rajkumar
author img

By

Published : Nov 16, 2021, 6:41 PM IST

பெங்களூரு : கன்னடத் திரையுலகின் பவர் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகர் புனித் ராஜ்குமார் (Puneeth Rajkumar). அக்டோபர் 29ஆம் தேதி காலை உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சிகிச்சைக்காக புனித் ராஜ்குமார் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி அன்றைய தினமே காலமானார். அவருக்கு வயது 46. புனித் ராஜ்குமாரின் உடல் மூன்று நாள்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக பெங்களூருவில் உள்ள காண்டீவரா ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டது.

சிரஞ்சீவி, வெங்கடேஷ், பாலகிருஷ்ணா உள்ளிட்ட திரைத்துறையைச் சேர்ந்த பலர் புனித் ராஜ்குமார் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். அதே போல் நடிகர்கள் பிரபு, சிவகார்த்திகேயன், ராம் சரண், விஜய் சேதுபதி, சூர்யா உள்ளிட்டோர் புனித் ராஜ்குமாரின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

கன்னட திரையுலகில் 49 படங்கள் நடித்த புனித் ராஜ்குமார், கண்தானம் உள்ளிட்ட பல்வேறு பொதுநலப்பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டுவந்தார்.

புனித் ராஜ்குமாரின் கண்களுக்கு ஏற்ற நான்கு பயனாளிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பார்வை குறைபாடு சரிசெய்யப்பட்டது.

புனித் ராஜ்குமார் கண்தானம் செய்திருந்தால், அவரது ரசிகர்கள் பலர் தற்போது கண்தானம் செய்து வருகின்றனர். இந்நிலையில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரை கெளரவிக்கும் விதமாக கர்நாடக ரத்னா விருது (Karnataka Ratna Puneeth Rajkumar) வழங்கப்பட உள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ட்விட்டரில், “புனித் ராஜ்குமாரை கௌரவிக்கும் வகையில் அவருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நால்வரின் வாழ்வில் ஒளி பாய்ச்சிய புனித் ராஜ்குமார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.