உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் ஹைதிரி ஆகியோர் நடிக்கும் 'சைக்கோ' படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. வெளியான சில மணி நேரங்களிலேயே பத்து லட்சம் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.
சைக்கோ படத்திற்கு இணையதளங்களில் கிடைத்த வரவேற்பு குறித்து தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் கூறியிருப்பதாவது:
'சைக்கோ' டீசர் அடைந்திருக்கும் வெற்றிக்குக் காரணம் மிஷ்கின்தான். டீசரில் என்ன கொடுக்க வேண்டும் என்பதை மிகச் சரியாக கணித்து நம்பிக்கையுடன் கொடுத்தார்.
ஒட்டுமொத்த படக்குழுவும் டீசர் குறித்து மகிழ்ச்சியடைந்திருக்கிறோம். டீசரைப் பார்ப்பவர்கள் வெறும் லைக் கொடுப்பதுடனோ, பகிர்ந்துகொள்வதுடனோ நின்றுவிடாமல் தங்கள் கருத்தையும் வெளிப்படுத்திவருகின்றனர்.
தனித்தன்மை மிக்க படைப்புகள் எப்போது வந்தாலும் வரவேற்புப் பெறும் என்பதை 'சைக்கோ' டீசர் நிரூபித்திருக்கிறது. 'சைக்கோ' படத்தின் கதை என்னவாக இருக்கும் என்று யூகிக்க ஆரம்பித்துவிட்டனர். 'சைக்கோ' படம் வெளியாகும்வரை இது தொடரட்டும்.
இளையராஜா இசை படத்துக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும். பின்னணி இசை சைக்கோ படத்தின் சிறப்பம்சம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் வாசிங்க: விக்ரம் பிரபு - துல்கர் சல்மான் இணையும் ஆக்ஷன் - த்ரில்லர்!