ETV Bharat / sitara

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்: தலைவர் பதவிக்குப் போட்டியிட டி. ராஜேந்தர் ஆலோசனை! - தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் டி. ராஜேந்தர்

சென்னை: தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிடும்படி தயாரிப்பாளர்கள் பலர் தன்னிடம் வற்புறுத்துவதாகவும், இது குறித்து ஆலோசித்துவருவதாகவும் டி. ராஜேந்தர் தெரிவித்தார்.

T. Rajender
T. Rajender
author img

By

Published : Oct 12, 2020, 2:17 PM IST

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் அடுத்த மாதம் (நவம்பர்) 22ஆம் தேதி சென்னை அடையாறு டாக்டர் எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 16ஆம் தேதி தொடங்குகிறது.

தேர்தலில் போட்டியிடும் அணிகள் ஆதரவு திரட்டும் பணியில் தீவிரமாகி உள்ளன. ஏற்கனவே டி. சிவா, ராமசாமி என்கிற தேனாண்டாள் முரளி ஆகியோர் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக அறிவித்திருந்தனர்.

தற்போது டி. ராஜேந்தரும் தலைவர் பதவிக்குப் போட்டியிடத் தயாராவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. டி. ராஜேந்தர் ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவராக இருக்கிறார்.

இந்தச் சங்கத்தில் நிர்வாகிகளாக இருப்பவர்கள் வேறு சங்கங்களில் பொறுப்பேற்க கூடாது என்று விதி உள்ளது. இந்த விதியை தற்போது மாற்றி உள்ளனர்.

அதாவது வேறு சங்கங்களிலும் பொறுப்புக்கு வரலாம் என்று செயற்குழுவைக் கூட்டி திருத்தம்செய்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

டி.ராஜேந்தரிடம் இது குறித்து கேட்டபோது, “தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிடும்படி தயாரிப்பாளர்கள் பலர் என்னிடம் வற்புறுத்துகின்றனர். இது குறித்து ஆலோசித்துவருகிறேன்” என்றார்.

இதையும் படிங்க: எந்திரன் பட கதை திருட்டு வழக்கு: விசாரணைக்கு தடை கோரிய ஷங்கரின் மனு தள்ளுபடி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.