தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கான தேர்தல் கடந்த நவம்பர் 22ஆம் தேதி நடந்தது. இதில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும், துணைத் தலைவராக எஸ். கதிரேசனும், பொருளாளராக சந்திரபிரகாஷ் ஜெயினும், செயற்குழு உறுப்பினர்களாக ஆர்.வி. உதயகுமார், மனோபாலா, சக்தி சிதம்பரம், மனோஜ்குமார், ஐசரி கணேசன் உள்ளிட்டோர் வெற்றிபெற்றனர்.
இந்நிலையில், இவர்கள் அனைவரும் முதலமைச்சர் பழனிசாமியை முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். சந்திப்பின்போது, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவும் உடனிருந்தார்.