ETV Bharat / sitara

'ஒன்று இணைந்து செயல்பட வேண்டும்' - தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் வேண்டுகோள்! - கோலிவுட் செய்திகள்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் சிலர், மற்ற தயாரிப்பாளர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர்.

தயாரிப்பாளர்
தயாரிப்பாளர்
author img

By

Published : May 11, 2020, 6:50 PM IST

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றன. ஜூன் 21ஆம் தேதி தேர்தல் நடத்த முடிவு செய்தனர். இதற்கான வேட்பு மனுக்கள் வருகிற 11ஆம் தேதி(இன்று) முதல் 14ஆம் தேதி வரை சங்க அலுவலகத்தில் வழங்கப்படும் என்றும், மே 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை வேட்பு மனுக்களை சங்க அலுவலகத்தில் சேர்த்துவிட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், கரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பணிகள் தொடங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதற்கிடையில் தயாரிப்பாளர்கள் இடையே பிரச்னை நிலவி வருவதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் சிலர், மற்ற தயாரிப்பாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், ' அன்புள்ள தயாரிப்பாளர் நண்பர்களே; தற்சமயம் கரானா வைரஸ் தாக்குதல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், நமது தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் மனரீதியாகவும், தொழில் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே.

நமது சங்கத்திற்கு தேர்தல் தள்ளிப் போகக்கூடிய சூழ்நிலை உள்ளதால், இந்த நேரத்தை வீணாக்காமல், நல்ல விஷயங்களை பேசித் தீர்வு காண்பதற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தேர்தல் நேரத்தில் பல அணிகளாகப் பிரிந்தாலும், திரைத்துறையை சீர்தூக்கி நிலைநிறுத்தும் விஷயத்தில் நாம் அனைவரும் ஒரு அணியாக ஒருங்கிணைந்து செயல்பட்டுத் தீர்வு கண்டு, அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். நமக்கு உண்டான பிரச்னையை நாமே ஒருங்கிணைந்து தீர்த்துக்கொள்ளப்போவதால், இதற்கு நீதிமன்றமோ, நீதிபதியோ, பதிவாளரோ மறுப்பு சொல்லப்போவதில்லை.

நமது சக உறுப்பினர்கள் திரைத்துறை சம்பந்தப்பட்ட பிரச்னைகளை அரசாங்கத்திடமும், திரைப்பட நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், ஃபைனான்சியர்கள் ஆகியோருடன் கலந்து பேசி, நமது திரைத்துறைக்கு ஏற்பட்டிருக்கும் பேரிழப்பை சரி செய்து கொள்ள வேண்டும்.

தமிழ்த் திரைத்துறையும், தயாரிப்பாளர்களும் மன நிம்மதியாக சிறப்பாக செயல்பட, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர்களாகிய பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ். தாணு, கேயார், டிஜி தியாகராஜன், முரளிதரன் இவர்களுடன் அனுபவம் வாய்ந்த 36 தயாரிப்பாளர்கள், அடங்கிய மொத்தம் 42 பேர் கொண்ட இந்தக் குழு திரைத்துறையில் அனைத்துத்துறைகளுடனும் கலந்து பேசி, நல்லதொரு விடியலைத் தயாரிப்பாளர்களுக்கு ஏற்படுத்தித் தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒருங்கிணைத்து குழுவுக்கு ஆதரவும், ஆலோசனைகளையும், ஒத்துழைப்பினையும் வழங்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: அம்மாக்களுடன்... திரைப்பிரபலங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.