தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி 'அமைதிப்படை-2', 'கங்காரு' ஆகிய படங்களைத் தயாரித்திருந்தார். மேலும் 'மிக மிக அவசரம்' என்ற படத்தை தயாரித்து இயக்கியிருந்தார். இத்திரைப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து படத் தயாரிப்பில் கவனம் செலுத்தியவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 'மாநாடு' படத்தை தயாரித்துவருகிறார்.
இதனைத் தொடர்ந்து மீண்டும் புதிய படம் ஒன்றைத் தயாரித்து இயக்க சுரேஷ் காமாட்சி முடிவு செய்துள்ளார். பிரபல எழுத்தாளர் ம. காமுத்துரை எழுதிய 'முற்றாத இரவொன்றில்' என்ற புதினத்தைத் தழுவி இப்படம் உருவாகிறது.

இதற்கான முதற்கட்டப் பணிகளை மேற்கொண்டுவரும் அவர் 'மாநாடு' படத்தை முடித்துவிட்டு இப்படத்தில் கவனம் செலுத்தவுள்ளார்.
இதையும் படிங்க... சிரஞ்சீவியின் 'ஆச்சார்யா' வெளியாகும் தேதி அறிவிப்பு!