இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "JSK FILM CORPORATION நிறுவனம் இன்று 15ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. புதிய சிந்தனை, புதிய கோணம், புதிய பாதை என்று தனித்தன்மையுடன் செயல்பட்டு வித்தியாசமான கதைகளத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்தும், வெளியிட்டும் மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளது. இரண்டு முறை தேசிய விருதுகளையும், பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பல விருதுகளையும் பெற்று மக்களின் ஆதரவோடு இந்நிறுவனம் 15ஆவது வருடத்தில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ளது.
10க்கும் மேற்பட்ட புதிய இயக்குநர்களையும் 6க்கும் மேற்பட்ட புதிய இசையமைப்பாளர்களையும் அறிமுகப்படுத்திய பெருமை எங்கள் நிறுவனத்திற்கு உண்டு. JSK AUDIO என்ற ஆடியோ நிறுவனமும் சொந்தமாக தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகிறது.
இத்தருணத்தில் நீண்ட நாள்களாக வெளியீட்டுக்காக காத்திருக்கும் ‘அண்டாவ காணோம்’ திரைப்படமும், அருண்விஜய் நடப்பில் ‘வா டீல்’ திரைப்படமும் வெகு விரைவில் வெளியாகும். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த ஆண்டு மேலும் இரண்டு புதிய திரைப்படங்களை தயாரிக்க உள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அதற்காக புதிய இயக்குநர்களிடம் கதைகளை கேட்பதற்கு தயாராக உள்ளோம்.

எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ஊடகத்துறையினருக்கும், திரைப்படத் துறையினருக்கும் ரசிகப் பெருமக்களுக்கும் இத்தருணத்தில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அடையாளம்தான் துறப்போம் எல்லா தேசத்திலும் போய் வசிப்போம்