ETV Bharat / sitara

'அஜித்தை நாயகனாக அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் சிரமத்தில் இருக்கிறார்'

அஜித்தை நாயகனாக அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம் தற்போது சிரமத்தில் இருப்பதாக, தயாரிப்பாளர் கே. ராஜன் கூறியுள்ளார்.

K rajan
K rajan
author img

By

Published : Feb 1, 2020, 9:10 AM IST

மின்னல் முருகன் இயக்கத்தில் அறிமுக நாயகன் கமல் கோவிந்தராஜ் தயாரித்து நடித்துள்ள படம் 'புறநகர்'. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.

இதில் இயக்குநர் கே. பாக்யராஜ் , தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், நடிகர்கள் மன்சூர் அலிகான், அபி சரவணன், சண்டை கலைஞர் ஜாகுவார் தங்கம், படத்தின் கதாநாயகன் கமல் கோவிந்த்ராஜ், இயக்குநர் மின்னல் முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

புறநகர் இசை வெளியிட்டு விழாவில் கே ராஜன்

விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசுகையில், சில ரசிகர்கள் 1000 ரூபாயில் டிக்கெட் எடுத்து படம் பார்க்கிறார்கள். பல கோடி போட்டு படம் எடுத்துவிட்டு ஆயிரக்கணக்கில் டிக்கெட் வாங்குகிறார்கள். இவர்கள் எப்படி மக்கள் தலைவனாக இருக்க முடியும்? நான் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை. எம்ஜிஆர் சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர்.

இப்போது சினிமாக்காரர்கள் அரசை கண்டிப்பதும், பிறகு மன்னிப்புக் கேட்பதும் தற்போது நடைமுறையில் இருக்கிறது. அஜித்தை சோழா பொன்னுரங்கம் எனும் தயாரிப்பாளர் கதாநாயகனாக்கினார். தற்போது அவர் சிரமத்தில் இருக்கிறார். ஆனால் அஜித், ஸ்ரீதேவி கணவருக்கு படம் நடித்து கொடுக்கிறார். இதன்மூலம் அஜித் கணக்கில் சில கோடி ரூபாய் வருமானம் சேரும். கதாநாயகர்கள் தங்களை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர்களை ஒருபோதும் மறக்கக் கூடாது என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.