அக்ஷய் குமாரை வைத்து இந்தியில் ராகவா லாரன்ஸ் இயக்கிய லட்சுமி கடந்த மாதம் ஓடிடியில் வெளியாகியது. இது தமிழில் வெளிவந்த காஞ்சனா படத்தின் ரீமேக் ஆகும். தற்போது லாரன்ஸ் பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.
இதனிடையே பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகும் இப்படத்திற்கு “ருத்ரன்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.
திருமாறன் கதை, திரைக்கதையில் உருவாகும் “ருத்ரன்” படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் ராஜசேகர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். தயாரிப்பாளர் கதிரேசன் பிரமாண்டமாக தயாரித்து முதல் முறையாக இயக்குனராக அறிமுகமாகும் “ருத்ரன்” படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜன. 21) பூஜையுடன் தொடங்கியது.
இதையும் படிங்க...வீட்டிற்குள் 400 போன்சாய் மரங்கள் வளர்த்து அசத்தும் சுலைமான்