ETV Bharat / sitara

டி.ராஜேந்தரின் அடுக்குமொழிப் பேச்சை அருவருப்பாக பார்க்கின்றனர் - தயாரிப்பாளர் சிங்கார வடிவேலன் - producer election issues

சென்னை : டி.ராஜேந்திரன் அடுக்குமொழிப் பேச்சை தயாரிப்பாளர்கள் அருவருப்பாகவே பார்க்கின்றனர் என தயாரிப்பாளர் சிங்கார வடிவேலன் தெரிவித்துள்ளார்.

producer-counsel-issues-singaravadivelan-spl-interview

author img

By

Published : Oct 24, 2020, 4:58 PM IST

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் 2020 - 2022ஆம் ஆண்டிற்கான நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல், வரும் நவம்பர் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிடுபவர்களின் வேட்புமனு பரிசீலனை நேற்று (அக்.23) நடைபெற்றது. இதில் கதிரேசன், ராதாகிருஷ்ணன், சந்திரபிரகாஷ் ஆகியோரின் வேட்புமனுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இம்மூவரையும் தகுதி நீக்கம் செய்ய செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் சிங்கார வடிவேலன் தேர்தல் அலுவலருக்கு மனு அளித்துள்ளார். இந்நிலையில், இது குறித்து ஈடிவி பாரத்திற்கு தயாரிப்பாளர் சிங்கார வடிவேலன் சிறப்புப் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அவருடனான் இந்தப் பேட்டி பின்வருமாறு:

”தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் தொடர்பாக நீதிமன்றம் செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறதே?

கடந்த நிர்வாகத்தில் பதவி வகித்த கதிரேசன், ராதாகிருஷ்ணன், சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகிய மூன்று உறுப்பினர்கள், சங்க விதிமுறைகளுக்கும் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கும் முரணாக, செயலர், பொருளாளர், துணைத் தலைவர் பதவிகளுக்கு மனு அளித்துள்ளனர். அவர்களின் வேட்புமனுவை தேர்தல் அலுவலர், ஓய்வு பெற்ற நீதிபதி ஜெயசந்திரன் நிறுத்தி வைத்துள்ளார்.

அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக நாங்கள் உரிய ஆவணங்களை சமர்பிக்க உள்ளோம். நீதியரசர் சரியான நடவடிக்கை எடுத்து அவர்களை தகுதிநீக்கம் செய்வார் என்று நம்புகிறோம். அப்படி நடைபெறவில்லை என்றால் வரும் 30ஆம் தேதி நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம்.

உங்கள் அணியின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

எங்களுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஏனென்றால் நாங்கள் எந்த சங்கத்திலும் இதுவரை இல்லை. இதுவரை எந்த நிர்வாகத்திலும் இல்லை. அதனால், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் புதிய அணி வரவேண்டும் என்ற நோக்கில் எங்களுக்கு வரவேற்பு அளித்து வருகின்றனர். ஆகையால் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதேபோன்று, அதிகமான தயாரிப்பாளர்கள் எங்களுக்கு தொலைபேசி மூலம் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தயாரிப்பாளர் சிங்கார வடிவேலன் பிரத்யேகப் பேட்டி

டி ராஜேந்தரின் அணியின் வெற்றி வாய்ப்புகள் குறித்து?

ஏற்கனவே நிர்வாகத்தில் இருந்த நடிகர் விஷாலின் செயல்முறையில் சங்க உறுப்பினர்களுக்கு திருப்தியில்லை. ஏனென்றால், அவரை ஒரு நடிகராகவே பார்க்கின்றனர். அதேபோன்று நடிகர் டி.ராஜேந்தரையும் ஒரு நடிகராகவே பார்க்கின்றனர். டி. ராஜேந்தர் அடுக்குமொழிகளுக்கு ரசிகர் வேண்டுமானால் கை தட்டுவார்கள். ஆனால், இது முதலாளிகளைக் கொண்டுள்ள சங்கம். அவரின் பேச்சை அனைவரும் அருவருப்பாகவே பார்க்கின்றனர். புதியவர்கள் வந்து இந்த சங்கத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றும் அனைவரும் விரும்புகின்றனர்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்க இப்படி ஒரு தரிசனமா? பாலிவுட் ஸ்மைல் குயின் வெளியிட்ட கிளாமர் கிளிக்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.