மலையாள எழுத்தாளர் பெனியமின் எழுதிய புதினம் 'ஆடு ஜீவிதம்’ (Goat days). மலையாளத்தில் உருவான இந்தப் புதினம், ஆங்கிலம், அரபி, தமிழ், கன்னடம், இந்தி எனப் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
இந்தப் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு பிரித்விராஜ் நடிப்பில் இயக்குநர் பிளெஸ்ஸி இயக்கத்தில் ஆடு ஜீவிதம் படம் உருவாகிவருகிறது.
ஆடு ஜீவிதம் படத்திற்காக 20 கிலோ எடை குறைந்து, அதிக தாடியுடன் காணப்படுகிறார் பிரித்விராஜ். வாசகர்களுக்குப் படிக்க படிக்க ஆவலை அதிகரித்த கதை என்பதால், அதன் தன்மை மாறாமல் எடுக்க விரும்புகிறது இதன் படக்குழு. அதனால் முக்கியமான தொழில்நுட்பக் கலைஞர்களைக் கொண்டு படம் உருவாகிவருகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.
-
BACK! #OffToQuarantineInStyle pic.twitter.com/eB0ZCfRAVw
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) May 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">BACK! #OffToQuarantineInStyle pic.twitter.com/eB0ZCfRAVw
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) May 22, 2020BACK! #OffToQuarantineInStyle pic.twitter.com/eB0ZCfRAVw
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) May 22, 2020
இப்படத்தின் படப்பிடிப்பு ஜோர்டன் நாட்டில் உள்ள பாலைவனப் பகுதிகளில் நடைபெற்றுவருகிறது. தற்போது உலகப் பெருந்தொற்றான கரோனா காரணமாக படப்பிடிப்பை நிறுத்திவைக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும் ஜோர்டானில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் அனைத்தையும் முழுமையாக படக்குழு எடுத்துவிட்டது.
படப்பிடிப்பு தற்போது ரத்தானதால் அங்கு சிக்கியுள்ள 58 பேரை இந்தியாவிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்குமாறு இயக்குநர் பிளெஸ்ஸி கேரள திரைப்படச் சங்கத்திற்கு கோரிக்கைவிடுத்திருந்தார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
இதனையடுத்து பிரித்விராஜ் அவருடைய படப்பிடிப்பு குழுவினர் இன்று கொச்சிக்குத் திரும்பியுள்ளனர். இவரது மனைவி சுப்பிரியா தனது சமூகவலைதள பக்கத்தில், "மூன்று மாதங்களுக்கு பிறகு பிரித்விராஜ் மற்றும் அவருடைய படப்பிடிப்பு குழுவினர் கேரளாவிற்கு பாதுகாப்பாக வந்து சேர்ந்துள்ளனர். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் பாதுகாப்பாக கேரளா வந்து இறங்கியதற்கு யாரெல்லாம் உதவினார்களோ அவர்கள் அனைவருக்கும் நன்றி. இவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்ப பிரார்த்தனை செய்த ரசிகர்கள், நலம் விரும்பிகள் அனைவருக்கும் நன்றி. இரண்டு வாரங்கள் கழித்து அவரை நலமுடன் சந்திப்போம் என நம்புகிறேன்". இவ்வாறு பதிவிட்டுள்ளார்.