சென்னை: வீட்டில் தவறி கீழே விழுந்ததில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள ஹைதராபாத் சென்றுள்ளார் நடிகர் பிரகாஷ்ராஜ்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தொடர்ந்து நடித்துவருபவர் பிரகாஷ்ராஜ். கேஜிஎப் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ள பிரகாஷ்ராஜ், அடுத்ததாக மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் நடிக்கிறார். இதற்காக சென்னையில் உள்ள தனது வீட்டில் தங்கி படப்பிடிப்பிற்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று வீட்டில் இருந்தபோது எதிர்பாராதவிதமாக அவர் கீழே வழுக்கி விழுந்துள்ளார். இதில் அவரது இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டார்.
இதனை தொடர்ந்து மேல் சிகிச்சை எடுத்துக்கொள்ள அவர் ஹைதராபாத் சென்றுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு சிறிய விபத்து.. லேசான எலும்பு முறிவுதான்.. பாதுகாப்பான கைகளில் என்னை ஒப்படைப்பதற்காக ஹைதராபாத்தில் உள்ள என் நண்பர் டாக்டர் குருவாரெட்டியிடம் செல்கிறேன். அனைத்தும் சரியாகிவிடும், கவலை வேண்டாம்... என்னை உங்கள் நினைவில் கொள்ளுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மீரா மிதுனின் விஷமத்தனம் - எம்.எஸ்.பாஸ்கர் கண்டனம்!