தமிழ் சினிமாவில் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படம் மூலம் அறிமுகமானவர் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். அறிமுகமான முதல் படத்திலேயே இளைஞர்களின் கவனத்தை ஈர்த்த இவர் அடுத்ததாக சிம்புவை வைத்து 'அன்பாதவன் அடங்காதவன் அசரதவன்' படத்தை இயக்கினார்.
இந்த நிலையில் தற்போது இவர், பிரபுதேவை வைத்து 'பகீரா' என்ற படத்தை இயக்கிவருகிறார். பிரபு தேவாவின் 55வது படமாக உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு 70 சதவிகிதம் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் பிரபு தேவா, மொட்டை அடித்துக் கொண்டு, மூன்று கண்கள் கொண்ட ஆரஞ்சு நிற கண்ணாடி அணிந்து கொண்டு கோபமாக நின்று கொண்டிருக்கிறார்.
-
Extremely Impressive First Look of #Bagheera starring my good friend @PDdancing master. Best wishes to the team. @Adhikravi @RVBharathan @AmyraDastur93 @AbinandhanR @AntonyLRuben @Ganesansmusic88 @NjSatz @DoneChannel1 @CtcMediaboy pic.twitter.com/LWk6Sdlwj3
— Dhanush (@dhanushkraja) February 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Extremely Impressive First Look of #Bagheera starring my good friend @PDdancing master. Best wishes to the team. @Adhikravi @RVBharathan @AmyraDastur93 @AbinandhanR @AntonyLRuben @Ganesansmusic88 @NjSatz @DoneChannel1 @CtcMediaboy pic.twitter.com/LWk6Sdlwj3
— Dhanush (@dhanushkraja) February 14, 2020Extremely Impressive First Look of #Bagheera starring my good friend @PDdancing master. Best wishes to the team. @Adhikravi @RVBharathan @AmyraDastur93 @AbinandhanR @AntonyLRuben @Ganesansmusic88 @NjSatz @DoneChannel1 @CtcMediaboy pic.twitter.com/LWk6Sdlwj3
— Dhanush (@dhanushkraja) February 14, 2020
அது மட்டுமின்றி போஸ்டரில், NO MORE VALENTINE'S DAY என்றும் பிரபு தேவாவின் முகத்தில் இருந்து ரத்தமும் வழிந்து கொண்டு இருக்கிறது. மர்மங்கள் நிறைந்த இப்போஸ்டர், படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைத்துள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர். இதுதவிர பிரபுதேவா, உம்மை விழிகள், தேள் போன்ற படங்களில் நடித்துவருகிறார்.
இதையும் படிங்க: 'சின்மயி ஒரு விளம்பரப் பிரியர் - ராதாரவி