ETV Bharat / sitara

'குலேபகாவலி' பட இயக்குநருடன் மீண்டும் கைக்கோர்த்த 'லட்சுமி' கூட்டணி

author img

By

Published : Aug 6, 2021, 11:07 PM IST

பிரபு தேவா - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று (ஆக.6) தொடங்கியது.

prabhu deva
prabhu deva

பிரபு தேவா தற்போது 'பொன்மாணிக்கவேல்', 'யங் மங் சங்', 'பஹிரா', 'பொய்க்கால் குதிரை' போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் 'பொன்மாணிக்கவேல்' அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியிட்டுக்கு தயாராகவுள்ளன.

இந்நிலையில், பிரபு தேவா 'குலேபகாவலி', 'ஜாக்பாட்' போன்ற படத்தின் இயக்குநர் கல்யாண் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். 'லட்சுமி' படத்திற்கு பின் பிரபு தேவா - ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் இரண்டாவது படம் இதுவாகும்.

அபிஷேக் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் யோகி பாபு, மன்சூர் அலிகான், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (ஆக.6) புதுச்சேரியில் தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க: பிரபுதேவாவின் 'பொய்க்கால் குதிரை' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.