'பாகுபலி' நாயகன் பிரபாஸ் தற்போது 'ராதே ஷியாம்', 'சலார்', 'ஆதிபுருஷ்', '#பிரபாஸ் 21' என அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து நடித்துவருகிறார். திரையில் ஆக்ரோஷமாக இருக்கும் பிரபாஸ் ரியல் லைப்பில் மிகவும் அமைதியானவர் அதுமட்டுமல்லாது ஒரு கார் பிரியரும்கூட. இவர் தனது சொகுசு காரில் சவாரி செய்யும் புகைப்படங்கள், வீடியோக்களை அவ்வப்போது சமூகவலைதளத்தில் வெளியிட்டுவருவார்.
இவரிடம் ஏற்கனவே, எம்டபிள்யூ 520 டி, இன்னோவா கிறிஸ்டா, ஜாகுவார் எக்ஸ்ஜேஎல், ரேஞ்ச் ரோவர் வோக் உள்ளிட்ட கார்கள் உள்ளன. இந்நிலையில் தற்போது புதியதாக ரூ. 6 கோடி மதிப்பிலான லம்போர்கினி அவென்டடோர் எஸ் ரோட்ஸ்டர் (Lamborghini Aventador S Roadster) என்னும் காரை வாங்கியுள்ளார். இந்த காருடன் பிரபாஸ் நிற்கும் புகைப்படம் தற்போது சமூகவலைதளத்தில் வேகமாக பரவிவருகிறது.