ETV Bharat / sitara

லண்டனைக் கலக்கும் 'பாகுபலி' - தேவசேனாவுடன் பல்வாள்தேவன்

லண்டனில் 'பாகுபலி' குழு மீண்டும் இணைந்த உற்சாக புகைப்படத்தை நடிகர் பிரபாஸ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

author img

By

Published : Oct 20, 2019, 12:08 PM IST

Updated : Oct 20, 2019, 1:57 PM IST

baahubali

இந்திய சினிமாவை உலகம் முழுவதும் வியந்து பார்க்க வைத்த பெருமையைப் பெற்றுத் தந்தது 'பாகுபலி' சீரிஸ் படங்கள். தென்னிந்திய பாக்ஸ் ஆபிஸ் சரித்திரத்தை மாற்றியமைத்த 'பாகுபலி', 'பாகுபலி' 2 ஆகிய படங்களை எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கியிருந்தார். படத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்தப் படத்துக்கு தெலுங்கு சினிமாவின் மூத்த இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள், பின்னணி இசை பெரிய அளவில் பேசப்பட்டன.

baahubali
பிரபாஸ் இன்ஸ்டாகிராம்

இந்த நிலையில், 'பாகுபலி' சீரிஸ் படங்களில் இசைக்கோர்ப்பு குறித்து விளக்கும் நிகழ்ச்சி லண்டனிலுள்ள பழமை வாய்ந்த ராயல் பெர்ட் ஹால் நடைபெறவுள்ளது. இதற்காக 'பாகுபலி' படக்குழுவினர் சமீபத்தில் லண்டன் சென்றனர். ராயல் பெர்ட் ஹால் ஆர்கெஸ்ட்ரா சார்பில் எம்.எம்.கீரவாணியின் லைவ் ஷோ நடைபெற்றது. அப்போது பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, ராஜமெளலி இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பிரபாஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ராயல் பெர்ட் ஹாலில் திரையிடப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம் 'பாகுபலி' ஆகும். மேலும் ஆங்கிலம் அல்லாத வேற்று மொழி திரைப்படம், இங்கு திரையிடப்பட்டதும் இதுவே முதல்முறை ஆகும்.

இதையும் வாசிங்க: ஆண்டனி இசைக்கலைஞர் என்னும் 'நிசப்தம்' மாதவன்

Intro:Body:

Bahubali news story

Conclusion:
Last Updated : Oct 20, 2019, 1:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.