நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'சூரரைப் போற்று' திரைப்படம் தற்போது ரிலீஸுக்குத் தயாராகவுள்ளது. இதையடுத்து அவர் ஆறாவது முறையாக ஹரி இயக்கத்தில் உருவாகவுள்ள 'அருவா' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கரோனா வைரசால் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குநர் ஹரி தற்போது இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகளைத் தேர்வுசெய்யும் பணிகளில் பிஸியாக உள்ளார்.
அந்தவகையில் இதில் ஹீரோயினாக யாரை நடிக்கவைக்கலாம் என யோசித்த படக்குழு, தற்போது நடிகை பூஜா ஹெக்டேவை அணுகியுள்ளது. அவரும் கதை கேட்டுவிட்டு, நடிக்க ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே ஹரி இயக்கத்தில் சூர்யா, ’ஆறு’, ’வேல்’, ’சிங்கம்’, ’சிங்கம் 2’, ’சிங்கம் 3’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சம்யுக்தா ஹெக்டேவின் க்யூன் பட பாடலுக்கு நடனமாடும் வீடியோ