தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து கல்லூரி மாணவர்கள் ஆங்காங்கே போராட்டங்களை நடத்தி தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட கயவர்களுக்கு சரியான தண்டனை வழங்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கக்கோரி வலியுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் மாணவர்களிடையே பூதாகரமாகியுள்ள நிலையில் போராட்டங்கள் வலுத்து வருகிறது.
இதனிடையே, பொள்ளாச்சியில் உள்ள கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருப்பது மாணவர்களிடத்தில் அரசின் மீதான நம்பிக்கையை இழக்க செய்துள்ளது. குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காக பகல் வேஷம் போடும் அரசை கண்டித்து வலைதள பக்கங்களில் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிக்பாஸ் புகழ் நடிகை ஐஸ்வர்யா தத்தா பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்து காணொளி மூலம் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதில் அவர், பொள்ளாச்சி சம்பந்தப்பட்ட இரண்டு வீடியோவை பார்த்தேன் ஆனால் அதை என்னால் பார்க்க முடியவில்லை தாங்க முடியாத வேதனையாக இருக்கிறது என தெரிவித்தார். மேலும், தொடர்ந்து இதுபோன்று பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. பார்க்கவே ரொம்ப கஷ்டமாக உள்ளது என ஐஸ்வர்யா தத்தா கூறியுள்ளார்.
Really shame of those who don’t think about a girl as a human being ... behind the bar is a small thing they shud hang to death #PollachiAssaultCase ... pic.twitter.com/89L8bSTpH1
— Aishwarya dutta (@Aishwaryadutta6) March 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Really shame of those who don’t think about a girl as a human being ... behind the bar is a small thing they shud hang to death #PollachiAssaultCase ... pic.twitter.com/89L8bSTpH1
— Aishwarya dutta (@Aishwaryadutta6) March 14, 2019Really shame of those who don’t think about a girl as a human being ... behind the bar is a small thing they shud hang to death #PollachiAssaultCase ... pic.twitter.com/89L8bSTpH1
— Aishwarya dutta (@Aishwaryadutta6) March 14, 2019
இந்த காலத்து இளைஞர்கள் மிக மோசமானவர்களாகவும் அம்மா, தங்கை, தோழி என்ற வித்தியாசம் தெரியாமல் பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கின்றனர். பெண்களிடம் நட்பாக பேசி அவர்களை நம்ப வைத்து ஏமாற்றுவது மிகவும் இழிவான செயல் என மிக கடுமையாக விமர்சித்தார். தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் நபர்கள் தங்களது பணபலத்தை வைத்து இன்னும் ஆறு மாதங்களில் வெளியே வந்து அதே தவறை மீண்டும் செய்வார்கள்.
முக்கியமாக காவல்துறை மீது குற்றவாளிகளுக்கு பயமில்லை தவறுகள் நடந்துகொண்டே இருக்கிறது என்று கூறிய ஐஸ்வர்யா தத்தா தயவு செய்து கைது செய்யப்பட்டுள்ள நான்கு பேரை ரிலீஸ் செய்யாதீங்க அவனுங்களை சாவடிங்க... பயம் இல்லாம போச்சு என ஆக்ரோஷமாக கூறியுள்ளார்.
தற்போது இந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.