தமிழில் 'ஆக்ஷன் கிங்' என அழைக்கப்படுவர் அர்ஜுன். தமிழில் ஏராளமான படங்களில் நடித்து புகழ் பெற்றவர். இவரது சகோதரி மகன் துருவா சார்ஜா. கன்னடத்தில் முன்னணி நாயகனான இவர் நடித்துள்ள படம் 'பொகரு'. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் பிப்ரவரி 19ஆம் தேதி வெளியாகிறது.
தமிழில் 'செம திமிரு' என்ற பெயரில் வெளியாகும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சம்பத், பவித்ரா லோகேஷ், ரவிஷங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நந்தா கிஷோர் இதை இயக்கியுள்ளார்.
மேலும் தென்னாபிரிக்காவை சேர்ந்த பாடி பில்டர் ஜான் லூகாஸ், ஜெர்மனியின் ஜோ லின்டர், பிரான்ஸ்சின் மோர்கன் அஸ்டீ, அமெரிக்காவின் கை கிரீன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் அர்ஜுன், தென்னாப்பிரிக்க பாடி பில்டர் ஜான் லூகாஸ், படத்தின் ஹீரோ துருவா சார்ஜா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.