இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கும் மக்களவைத்தேர்தலில், முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்க உள்ளது. தேர்தல் களத்தை மனதில் வைத்துக்கொண்டு இயக்குநர் ஓமங் பிரகாஷ் இயக்கத்தில் விவேக் ஒபராய் நடித்துள்ள மோடியின் வாழ்க்கை வரலாற்று படத்தை ஏப்ரல் மாதம் ரீலிஸ் செய்ய திட்டமிட்டிருந்தார்.
மோடி தனது ஐந்தாண்டு கால ஆட்சியில், எந்தப்பக்கம் திரும்பினாலும் மக்களின் வெறுப்புணர்வை சம்பாதித்துள்ளார் என்று எதிர்கட்சியினர் கூறிவரும் நிலையில், மக்கள் மனதில் இடம்பிடிக்கும் வகையில் மோடியின் வாழ்க்கை படத்தை ஏப்ரல் 11ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.
தேர்தல் நேரத்தில் இந்த சர்ச்சைக்குரிய படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத்தொடர்ந்து, ஏப்ரல் 5 தேதிக்கு மாற்றாக, 11ஆம் தேதி மோடி திரைப்படம் வெளியாவது உறுதி என்றும், அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் படக்குழுவினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.