ETV Bharat / sitara

தாதா சாகேப் பால்கே விருதின் பின்னணி என்ன? - rajinikanth

நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விருது குறித்து சுவாரஸ்ய தகவல்களை பார்ப்போம்.

தாதா சாகேப் பால்கே
தாதா சாகேப் பால்கே
author img

By

Published : Apr 1, 2021, 7:23 PM IST

தாதா சாகேப் பால்கே விருது இந்திய திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த விருது இந்திய திரைப்படத்துறையின் தந்தை என கருதப்படும் தாதா சாகேப் பால்கே பிறந்த நாள் நூற்றாண்டான 1969ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

தாதா சாகேப் பால்கே விருது ஏன் வழங்கப்படயிருக்கிறது?

கடந்த 1913ஆம் ஆண்டு, முதல் முழு நீளத் திரைப்படமான ராஜா ஹரிச்சந்திராவை இயக்கியவர், தாதா சாகேப் பால்கே. அவரின் நினைவாக இவ்விருது வழங்கப்படுகிறது.

தாதா சாகேப் பால்கே 1870ஆம் ஆண்டு நாசிக் அருகே திரும்பகேஸ்வரில் பிறந்தவர். மும்பை கலைக்கல்லூரியில், பயின்ற போது, புகைப்படம் எடுக்கும் முறையையும், இயற்கைக் காட்சிகளைக் கொண்டு சித்திரம் தீட்டும் முறையையும் கற்றார்.

சின்ன சின்ன படங்கள் எடுத்துப் பழகிய பின், இங்கிலாந்து சென்று வால்டன் ஸ்டுடியோவில் சினிமா கற்றுத் தாயகம் திரும்பினார். இவர் 'ஹரிச்சந்திரா’ படம் எடுத்த போது, பெண் வேடத்தில் நடிக்க நடிகைகள் கிடைக்கவில்லை.

இதனால் பெண் வேடத்தில் நடிக்க ஆண்களைப் பிடித்தார். மேலும் தனது குடும்பத்தில் உள்ள 18 பேரையும் நடிகர்களாக மாற்றினார், பால்கே. சினிமா என்னும் வெளிச்சத்தை மக்கள் பார்க்க, தன் வாழ்வை இருட்டில் தேய்த்துக்கொண்ட பால்கேவின் நினைவாகவே தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது.

விருது அறிமுகப்படுத்தப்பட்ட 1969ஆம் ஆண்டு நடிகை தேவிகா ராணிக்கு வழங்கப்பட்டது.

நடிகர்கள் சிவாஜி கணேசன், திலீப் குமார், இயக்குநர் சத்யஜித் ரே, கே.விஸ்வநாதன், கே.பாலசந்தர், இசை அமைப்பாளர் நௌஷத், தயாரிப்பாளர் நாகி ரெட்டி, பாடகி லதா மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே, உள்ளிட்டோருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தேசிய திரைப்பட விழாவில் பெயர் அறிவிக்கப்பட்டவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. விருதுடன் 10 லட்சம் ரூபாய் ரொக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.

தாதாசாகேப் பால்கே பெயரில் சில மாற்றங்களுடன் மேலும் பல விருதுகள் வழங்கப்படுவதால், சில நேரம் குழப்பம் ஏற்படும். இதுபோன்ற விருதுகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனத் தயாரிப்பாளர் ஷ்யாம் பெனிகல் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகிறார்.

ஆனால், அந்த விருதுகள் சில மாற்றங்களுடன் வழங்கப்படுவதால், தடை விதிக்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.